Top News

சம்பூர் மாவட்ட வைத்தியசாலை எதிர்வரும் மாதம் ஜனாதிபதியால் திறக்கப்படவுள்ளது



சப்னி அஹமட்-

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின்40மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர் வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு எதிர்வரும் மாதம் 07ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால ஶ்ரீசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு வரும் நோயாளர்களுக்கான பிரிவுகளையும்,விடுதிகளையும் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை நேற்று (12) பார்வையிட்ட பின்னரே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மூன்று மாவட்டங்களிலும் சரியான முறையில் தங்களது சுகாதார சேவைகளை செய்து வருகின்றது அதிலும் விசேடமாக இன மொழி வேறுபாடுகளுக்கு அப்பாலே எமது சேவையை மேற்கொண்டு வருகின்றோம் அதில் இவ்வாறு மக்களின் பிரச்சினைகளை கருத்திற்கொண்டே வைத்தியசாலைகளை அமைத்து வருகின்றோம்.

குறிப்பாக இப்பிரதேச மக்கள் தங்களது வைத்திய சேவைகளை பெற்றுக்கொள்வதில் அதிக கஷ்டத்தை எதிர்நோக்கி வந்தார்கள் அம்மக்களின் நிலமைகளை கருத்திற்கொண்டே இவ் வைத்தியசாலையை நாம் புதிய கட்டிடங்கள் ஊடாகவும்புதிய சுகாதார வாசதிகள் ஊடகாவும் ,சிறந்து வழங்களைக்கொண்டும் அபிவிருத்தி செய்துள்ளதுடன் மாவட்ட வைத்தியசாலை எனும் நல்ல தரத்திற்கு நாம் அப்பிரதேச மக்களை கருத்திற்கொண்டு உயர்த்தியுள்ளோம். எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும்குறித்த வைத்தியசாலையில் உல்ள உள்புரவெளிப்புர வேலைத்திட்டங்களை உடனடியாக நேர்த்தியான முறையில் மிக அவசரமாக வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க்ப்பட்டதுடன்வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகளையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்ச்ர் ஆராய்ந்தார்.

இவ்விஜயத்தின் போது. மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்சுகாதார அமைச்சின் உதவி செயலாளர்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்திட்டமிடல் பொருப்பாளர் உள்ளிட்ட சுகாதார முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post