Top News

முஸ்லிம் ஊருக்குள் பள்ளிவாசல் பக்கத்தில் நீயா விரச கட்அவுட்; எங்கே உலமாக்கள்?

சிலோன் முஸ்லிம் அக்கரைப்பற்று செய்தியாளர்


அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட எல்லைக்குள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள முஸ்லிம் ஒருவரின் கட்டிடத்தில் மேல்மாடியில் பாரியதொரு கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. விரசமான தோற்றத்தில் நீயா எனும் தொலைக்காட்சி நாடகத்தின் பாரிய பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது, அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல், அக்கரைப்பற்று மர்கஸ் போன்றவை இதனை வேடிக்கை பார்க்கின்றனவா? அல்லது கட்அவுட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அன்சார் தப்லீகி அவர்களின் நிருவாகத்திலிருக்கும் பள்ளிவாசல் என்பவை எங்கே போனது அல்லது அக்கரைப்பற்று பெயர்போன உலமாக்கள் எங்கே போனார்கள்? இப்படி பலதரப்பட்ட கேள்விகளுக்கு மத்தியில் இதனால் வருமானமீட்டும் உரிமையாளரின் ஈமான் எங்கே போனது? அதிகாரத்தில் இருக்கும் முஸ்லிம்கள் எங்கே?




Previous Post Next Post