பாறுக் ஷிஹான்-
காணி இல்லாதவர்களிற்கு காணிகளையும் வீடுகள் இல்லாதோருக்கு வீடுகளை அமைத்து தர தான் தயாராக இருப்பதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்க அதிபர் என். வேதநாயகன் தலைமையில் இன்று(08) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் அவர்களின் பிரச்சினைகள் விரிவாக ஆராயப்பட்டு பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் காணி இல்லாதவர்களிற்கு காணிகளையும் வீடுகள் இல்லாதோருக்கு வீடுகளை அமைத்து தர தான் தயாராக இருப்பதாகவும் அவற்றை பெற்றுக்கொடுக்கும் வழிமுறைகள் பல ஆராயப்படுவதாகவும் கூறினார்.
இது தவிர தற்போது யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் அமைச்சர் உள்வாங்கியதுடன் அரசாங்க அதிபருடன் குறித்த விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார். இதன் போது அமைச்சரின் யாழ் மாவட்ட மீள் குடியேற்ற இணைப்பாளர் சுபியான் மௌலவி மற்றும் மக்கள் காங்கிரசின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அமீன் ஹாஜீயார் உட்பட பலர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
Post a Comment