Top News

மாயக்கல்லியும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆடும் மங்காத்தாவும்.



நல்லாட்சியில் இனவாதம் அற்ற சுவனபதியாக இலங்கை திகழும் என்று நம்பி வாக்களித்த முஸ்லிம் சகாதேரர்களே! உங்களாேடு பகிர விரும்பும் சில வார்த்தைகள் இதோ. தனித்துவ அரசியல் கோஷங்கள் எம்மை முழுமையாக ஏமாற்றி வருவதை நாமனைவரும் அறிவோம். 

ஆர்ப்பாட்டங்களும் அதீத ஆலாபனைகளும் ஒழுங்குபடுத்தப்படாத இலக்கு நிர்ணயிக்கப்படாத ஹர்த்தால்களும் நமது சமூகத்தின் அபிலாஷைகளை பெற்றுத்தரப் போவதில்லை. ஆளும் கட்சியில் இருந்து கொண்டு எதர்க்கட்சித்தலைவரால் ஏற்பாடு செய்யப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து அரசியல் செய்யும் ஹகீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் வினோதம் இன்னுமா புரியவில்லை.? 

 முஸ்லிம்கள் இந்த நாட்டின் இறைமையை அந்நியர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே செனரத் மன்னனால் கிழக்கு மாகாணத்தில் குடியேற்றப்பட்டார்கள் ஆனால் அவர்களின் சந்ததிகளின் உணர்வுகள் வேண்டும் என்றே திட்டமிட்ட செயற்பாடுகளால் காயப்படுத்தப்படுகின்றன என்பதை பாராளுமன்றத்தில் உரத்துச் சொல்வதற்கு ஒரு பயலுக்கும் அறிவுமில்லை வரலாறு தொடர்பான தெளிவுமில்லை. முஸ்லிம்களே உங்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் ஆன்மீகத்தால் புடம்போடப்பட்ட அறிவினால் ஆளப்படும் சமூகமாக ஆகிக் கொள்ளுங்கள்.

 மாயக்கல்லிக்கு ஞானசார தேரர் வந்து ஒரு சில நாட்களுக்குள் தமிழ்த்தரப்பு ஹர்த்தாலுக்கு அழைக்கிறது என்றால் இதன் பின்னணி அரசியல் பற்றி ஆய்வு செய்து விட்டல்லவா நாம் களத்தில் இறங்க வேண்டும்? சட்டங்களை உருவாக்கவும் காெள்கைகளை வகுக்கவுமே நாம் இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறோம். 

 இந்ந நாட்டின் உத்தியோகபூர்வ பௌத்தபீடமாகிய அஸ்கிரிய பீடத்தின் தலையீட்டினைக் கோரினோமா? பௌத்தம் இந்த நாட்டில் சாந்த சொரூபிகளை உருவாக்கும் வல்மை அற்ற தத்துவ ஞானமா என்று கேள்வி எழுப்பி அவர்களின் இதயங்களை தரிசித்தாமோ? பாராளுமன்றத்தில் கண்ணீர் சிந்த வைத்தோமா? தனித்துவம் ,தாயகம், தேசியம், மனித உரிமைகள் போன்ற வாசகங்கள் இனிவரும் தசாப்தங்களின் முஸ்லிம் அரசியலின் சாெல்லாட்சிகளாக இருக்க முடியாது. 

அறிஞர் சித்தி லெப்பை, ரி.பி.ஜாயா, சேர் றாஸிக் பரீட்., பதியுத்தீன் மஹ்முத் போன்றவர்களின் பழைய அணுகுமுறைகளே இன்றும் புதுமையானது. எஙகளை இந்த நாட்டை நேசிக்க விடுங்கள். புத்தரின் போதனை தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதல்ல எனபதை உரத்துச் சொல்லுங்கள் என்று முஸ்லிம்கள் பெளத்தர்களை அறை கூவி அழைக்கும் காலம் இது. 

மாணிக்கமடுவில் மாணிக்கம் கிடைப்பதுமில்லை. மாயக்கல்லியில் ஒன்றும் மாயாவிகளும் இல்லை. மோதல்கள் உருவாகவில்லை. திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. ஜனாதிபதியை மௌனம் கலைக்கச் சொல்லுங்கள். பிரதமரை நித்திரை யில் இருந்து எழுப்பாட்டுங்கள். ஜனாதிபதியின் அதிகாரங்கள் இதற்காகவா மட்டுப்படுத்தப்பட்டன எனறு கேள்வி எழுப்புங்கள். நல்லாட்சியின் இலட்சணங்களை பிரகடனம் செய்யச் சொல்லுங்கள்.
Previous Post Next Post