அரசியல் நாடகம் அல்ல; உரிமை போராட்டம்

NEWS
0
வில்பத்து சரணாலய வர்த்தமானிக்கு எதிராக தமது பூர்வீக காணிகளை விடுவிக்கும் உரிமை போராட்டத்தில் தொடர்ச்சியாக 08 வது நாளாகவும்  ஈடுபடும் மறிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி மக்களை மறிச்சிக்கட்டியில் சந்தித்து கலந்துரையாடும்  போதே வடமாகாண உரிமைகளுக்கான அமைப்பின் பொருளாலர் M.M.அமீன் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.

மேலும் அங்கு வருகை தந்திருந்த நல்லாட்சிக்கான அமைப்பின் தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்களிடம் ஒரு காட்டமான வேண்டு கோளையும் விடுத்தார். நீங்கள் நல்லாட்சிக்காக உழைத்துவரும் தரமான புத்திஜீவிகள். எமது சமூகத்தின் சில சாக்கடை அரசியல்வாதிகள் இந்த உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி உண்மைக்கு புறம்பாக இது ஒரு அரசியல் நாடகம் என எமது மக்களின் முதுகின் மேல் ஏறி சவாரி செய்கின்றார்கள். 

இது அரசியல் நாடகம் அல்ல அடிமைப் படுத்தப்படும் ஒரு சமூகத்தின் உரிமைப் போராட்டம் என்பதை நீங்கள் இங்கிருந்து உணர்கின்றீர்கள்.  இதை அரசியல் நாடகம் என கூச்சலிடும் கூத்தாண்டிகள் உடனடியாக அந்த அறிக்கைகளை வாபஸ் பெற்று உண்மையின் பக்கம் உணர்ந்து செயற்படுமாறு வலியுறுத்த வேண்டும் என நல்லாட்சிக்கான அமைப்பிடம் வேண்டு கோள் விடுத்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top