எதிர்வரும் முதலாம் திகதி முதல் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடங்களில் குப்பை போடுவது தடைசெய்யப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நகரசபை,பிரதேச சபை மற்றும் அரச நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் குப்பை போடுவதற்கான தேவை ஏற்பட்டால் குறித்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து அதனுடன் தொடர்புடைய செலவுகளை ஈடு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.