’இறக்காமம், மானிக்கமடு பிரதேசத்தில் சட்டவிரோதமாக பெளத்த சிலையையும், விகாரையையும் அமைப்பதற்கு எடுக்கும் முயற்சியை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும். முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்ற சில பெருமான்மை சமூக அமைச்சர்கள் முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கும் வேலைத்திட்டங்களையும் இனப்பிரச்சினைகளை ஆரம்பித்துள்ளதையும், இச்செயற்பாடுகளுக்கு பின்னால் இவர்கள் இருப்பதும் எமக்கு தெளிவாகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை எம்மால் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ,எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் 76ஆவது சபை அமர்வு பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் கடந்த 25.04.2017 நடைபெற்றபோது, இறக்காமம் மானிக்கமடு பிரதேசத்தில் வைக்கப்பட்ட சிலைக்கு நீதி கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் போது உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
கடந்த ஒக்டோபர் மாதம் இப்பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்றினை வைப்பதற்கு அங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது அதன் போது இங்கு பிரரேணை எடுத்துக்கொள்ள முடியாத நிலை இருந்தது. அன்று இப்பிரதேசத்தில் வைக்கப்பட்ட புத்தர்சிலை இனவாத பிரச்சினை மேலும் கொண்டுவந்துவிடுமோ என்ற எண்ணத்தில் இது சம்மந்தமான பிரேரணை தள்ளிவகைக்கப்பட்டு நடவடிக்கை எடுத்துக்கொள்ள முயன்றோம்.
குறித்த சிலையை வைத்து விட்டு எங்கோயோ இருப்பவர்கள் தமிழ், முஸ்லிம், சிங்கள் பிரச்சினைகளை உருவாக்கி இனவாத்தை தூண்டி விட எண்ணி செயற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது இவற்றை நாம் அன்று குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு விவரத்தை அறிந்த போது காணக்கிடைத்தது. இவ்வாறு இனவாத்தை தூண்ட வேண்டும் என்று எங்கோ இருப்பவர்களும் வெளிநாட்டு சக்திகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். இங்குள்ள சிங்கள கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் இதை விரும்பவில்லை. இச்செயற்பாட்டை செய்து முஸ்லிம், சிங்கள இனவாதப்பிரச்சினைகள் மேற்கொள்ள சிலர் சதி செய்து வருகின்றது. என்பது மிகவும் தெளிவாக விளங்குகின்றது.
குறித்த சிலையை அங்கு அமைப்பதற்கான எந்த தேவையும் அவ்விடத்தில் இல்லை குறிப்பாக அங்கு எந்த சிங்கள மக்களும் வாழாத இடத்தில் புத்தர் சிலர் என்பது தேவையற்றது. இவை எல்லாம் தேவைகளுக்கு ஏற்ப செயற்படுத்த வேண்டும் மாறாக இனப்பிரச்சினைகளை உண்டு பன்னுவதற்காக இவ் விடத்தில் இவ்வாறு சிலைகளை அமைப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடையம் அல்ல.
பெரும்பான்மை உருப்பினர்களும் நாங்களும் இது சம்மந்தமாக பேசி அதற்காக ஒரு தீர்வை எட்டவேண்டும் தவிர இனப்பிரச்சினையை உண்டு பன்னுவதற்கு நாம் எத்தனிக்கூடாது. ஆகவே இது சம்மந்தாமாக ஆராய்வதற்கான குழுவில் இங்குள்ள பெருமான்மை சமூக உறுப்பினர்களும் இணைந்து இதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதற்கு உரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
இனத்தை காட்டிக்கொடுத்து அரசியல் செய்பவர்கள் இன்று உள்ளார்கள் அவர்கள் போன்றோர் தொடர்ந்தேர்ச்சியாக அதிகாரத்தில் இருப்பது என்பது கேள்விக்குறி ஆகவே அரசியல் வாதிகள் இனங்களுக்குள் பிரச்சினைகளை உண்டு பன்னும் கபட அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது.
அமைச்சர் தயாகமகே கூட மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கூட முஸ்லிம்களின் மனங்களை நோகும் படி நடந்துகொண்டுள்ளார் குறிப்பாக 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்குகளை பெற்ற இவர் இன்று முஸ்லிம் சமூகத்திற்கு பரிசு தந்துள்ளார் போன்று விளங்குகின்றது.
ஆகவே, இனவாத்தை உருவாக்குவதற்கு சில இன்று ஒற்றுமைப்பட்டுள்ளார்கள் ஆகவே இம்மாகாண சபையில் உள்ள சிங்கள சகோதர்கள் இணைந்து இவ்வாறான இனங்களை அழிக்கும் செயல்களிலும், இனவாதங்களை தூண்டும் செயலகளில் இருந்தும் பாதுக்காப்பு பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி இச்சிலை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும். என்பதுடன் நடுநிலையான குழு ஒன்றை நியமித்து இந்நாட்டுக்கும் இந்த சமூகத்திற்கு நன்மை பயக்க கூடிய வகையில் நடுநிலையாக செயற்படு வேண்டும் எனவும் சபையில் கோரினார்.
வீடியோ - https://www.facebook.com/almnazeermpc/posts/971626012939983