ஜனாதிபதி
முஸ்லிம் மக்களுக்கு பாதகமான எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கமாட்டார் என
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
எமது
சரணாலயப் பகுதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த வர்த்தமானியை
வெளியிட்டுள்ளார். முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதற்காகவோ,
முஸ்லிம் மக்களின் பூர்வீகக் காணிகளை இல்லாமல் செய்வதற்காகவோ இந்த
நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்பதை நான் பொறுப்புடன்
கூறிக்கொள்கின்றேன்.
வனப்பாதுகாப்பை
ஏற்படுத்துவதன் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் எவ்வித
எண்ணமும் இல்லை. எவருக்கேனும் தமது பூர்வீகக் காணி தொடர்பில் ஏதேனும்
பிரச்சினை இருந்தால், வர்த்தமானியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதில்
மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.