ஸாகிர் நாயக்கை கைது செய்ய உத்தரவு

NEWS
0
பிரபல இஸ்லாமிய பிரசாரகர் ஸாகிர் நாயக்கிற்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து மும்பை சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஸாகிர் நாயக் மீதான வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. 

இதனையடுத்து ஸாகிர் நாயக்கிடம் நிதி விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.  இதனை ஏற்றுக்கொண்டு ஸாகிர் நாயக்கிற்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top