ஜனாதிபதி கிண்ணியா வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்

NEWS
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிண்ணியா தள வைத்தியசாலைக்கு இன்று நண்பகல் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் சகிதம் அங்கு விஜயம் செய்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் டெங்கு நோயாளர்களை பார்வையிட்டதுடன் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

அத்துடன் வைத்தியசாலையை தரமுயர்த்தித் தருவதாகவும் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உடன் நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். பிரதேச அரசியல்வாதிகளுக்கு அறியத்தராமல் ஜனாதிபதி தனியாகவே கிண்ணியாவுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

6/grid1/Political
To Top