Top News

முஸ்லிம் பிரதேச கடற்கரைகளில் குவிந்து கிடக்கும் பியர் போத்தல்கள்; இஸ்லாம் எங்கே?

நவீன கால ஜாஹிலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பீதி எம் அனைவரையும் ஆட்டிவைத்துள்ளது, மதுவும் மாதுவும் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் இருளகற்றி இஸ்லாமிய மணம் வீசுவைத்த எம் பெருமானார் நபிகளாரின் வழித்தோன்றலில் அவர் உம்மத்தாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஜாஹிலியா காலத்தவர்கள் செய்ததை காட்டியும் கூடுதலான பாவங்களை செய்து கொண்டிருக்கின்றனர்.

அதிக முஸ்லிம் பிரதேசங்களில் போதை வஸ்து பாவனை, ஸ்மார்ட் மொபைல் விபச்சாரம், வட்டி, சூது போன்றவை மெலிந்து காணப்படுகிறது, இதற்கு கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களும் விதிவிலக்கல்ல


மேலே உள்ள படம் ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் எடுக்கப்பட்டது, இது ஒரு துாசி எனலாம் கடற்கரைகள் எங்கும் சாராய போத்தல்களும் சிகரட் அடிக்கட்டைகளும் குவிந்து கிடப்பதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

நமக்கு எதுக்கு வீண் வம்பு என்று விட்டு விடுவீர்கள், இதனால் ஒரு சமூகம் பாவத்தை செய்யப்போகிறது எதிர்கால சமுதாயம் அழியப்போகிறது. மது அருந்துவது பாவமில்லை அதனை பப்ளிக்கில் செய்யலாம் என்ற நிலை தோன்றிவிடும். இதனை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

Post a Comment

Previous Post Next Post