Top News

முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்

யாழ் மாவட்ட மீள்குடியேற்றத்தில், முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமயில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் கலந்துகொண்டார். 

குறித்த கலந்துரையாடலில், யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட, நாவாந்துறை குருநகர் மற்றும் சாவகச்சேரியில் மீள்குடியேற்றத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள், இடையூறுகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் இதன்போது அமைச்சர் மற்றும் அரச பிரதிநிதிகளின் கவனத்தற்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போதுவரை காணிகள் இன்னும் வழங்கப்படாமல் 1616 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளதாகவும், அவர்கள் அடங்கலாக 2200 வீட்டுத்திட்ட தேவைகள் முஸ்லிம் மக்களுக்கு உள்ளதாகவும் அவர்கள் இங்கு தெரிவித்துள்ளனர். 

உலக வங்கியின் நிதியில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தின் மூலம் பெரும்பாலான வீட்டுத்திட்ட பிரச்சினையை தீர்க்க தாம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் றிசாட் பதியுதீன், இதன்போது உறுதிளித்துள்ளார்.

மேலும், காணி மற்றும் வீடுகள் அற்ற நிலையில் யாழ் மாவட்டத்தில் வசித்துவரும் சுமார் 400 குடும்பங்களுக்கு தொடர்மாடி குடியிருப்பொன்றை அமைக்க ஏதுவான வகையில் அரச காணியொன்றை வழங்குமாறும் அரசாங்க அதிபரிடம் அமைச்சர் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றிகள் live360

Post a Comment

Previous Post Next Post