கிழக்கின் முஸ்லிம் பிரதேச மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களின் முக்கிய கவனத்திற்கு

NEWS
0


கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் அதிகப்படியான மோட்டார் சைக்கிள்கள் காணப்படுவதாக புள்ளிவிபரம் குறிப்பிடுகின்றது. இதனடிப்படையில் வாசகர்களாகிய எங்கள் மதிப்பிற்குரிய உங்காடு ஒரு சில விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். கிழக்கு மாகாணத்தின் முக்கிய முஸ்லிம் பிரதேசங்களில் வாகனத்தில் பயணித்த அனுபவத்தில் இதனை எழுதுகிறேன்.

நான்கு சக்கர வாகனங்களை விட இரு சக்கர் மோட்டார் வண்டிகள் ஆபத்தானவை, காரணம்வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிக விபத்துக்கள் நடைபெறும் நான்கு சக்கரங்களை போல பாதுகாப்பு காணப்படாது ஆகவே இரு சக்கர் மோட்டார் வண்டியில்  வேகத்தை குறைத்து செல்வது சாலச்சிறந்தது, பிரதான பாதைகளில் ஓரமாக செல்வது, சமிஞ்சைகளை கடைப்பிடிப்பது, ஒளி சமிஞ்சைகளை பிரயோகிப்பது கார் வேன்போன்ற பெரிய வாகனங்களுக்கு வழிவிடுவது போன்றவை விபத்தை தடுக்கும்.

பாதைக்கென ஒழுங்கு முறைகள் இருக்கிறது, அதனை கடைப்பிடிக்க வேண்டும் ஓவர்டேக் பண்ண வேண்டும் என்ற காரணத்திற்காக அதிவேகமாக சென்று வானத்தில் செல்வோரை திணறச் செய்தல், வழிவிடாமல் வீதியின் நடுவில் பயணித்தல் அப்படி ஹோர்ன் செய்தால் மிரட்டுதல், திடீரென பாதையை குறுக்கறுத்தல் அதிவேகம் போன்றவை குறித்த பிரதேசத்தில் நான் அனுபவித்த முக்கிய சவால்கள். இது ஒருவேளை உங்கள் பார்வைக்கு தவறாக காணப்படும். நீங்களும் நான்கு சக்கர வாகனத்தை இப் பிரதேசங்களில் ஓட்டிப்பார்த்தால் தெரியும் அருமை.

தயவு செய்து விபத்துக்களை குறைப்பதற்கு இயன்றவரை வீதிஒழுங்கை கடைப்பிடிப்போம்.

ஷேக் மிசாரி

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top