Headlines
Loading...
கும்புக்கணை நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

கும்புக்கணை நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

பிறவ்ஸ்

மொனராகலை - புத்தள ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் கும்புக்கணை நீர் சுத்திகரிப்பு நிலையம் வியாழக்கிழமை (30) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

5515 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கும்புக்கணை நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம், ஒரு நாளைக்கு 60000 சதுர மீட்டர் நீர் சுத்திகரிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்படவுள்ளது.

இத்திறப்பு விழாவில் ஊவா மாகாண முதலமைச்சர் சமர சம்பத் திசாநாயக்க, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்தரசிறி விதான, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தலைவர் கே.ஏ. அன்சார், வேலை பணிப்பாளர் மஹிலால் டி சில்வா மற்றும் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.