முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைவதன் மூலமே இலங்கை முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும், அண்மைக்காலமாக ஷமுஸ்லிம்களுக்கெதிராக நடந்துவரும் அநீதிகளுக்கு இணைந்து குரல் கொடுப்பதன் மூலமே சாதகமான முடிவுகளை பெற்றுக்கொள்ளமுடியும்.
20க்கும் மேற்பட்ட பள்ளிவாசல் பிரச்சினைகள், காணிப்பிரச்சினைகள், இதர பிரச்சினைகள் அனைத்திற்கும் ஓரே தீர்வாக ஒற்றுமைப்பட்டு கேட்பதன் மூலமே எமக்கு தகுந்த தீர்வுகளை பெற முடியும் அதை விடுத்து பிரிந்து சென்று எதிராளிகளாக பிரச்சாரம் செய்வதன் மூலம் எந்தவித முடிவையும் பெற முடியாது.
அமைச்சர்களான ஹக்கீம், றிசாத் உட்பட முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பசீர் சேகுதாவூத், ஹசனலி ஆகியோர் மறைந்த தலைவரின் நேரடி பாசறையில் தேர்ச்சி பெற்ற காரணத்தினால் ஒற்றுமைப்பட்டு நிகழ்கால நடப்புக்களை கருத்திற்கொண்டு முஸ்லிம்களுக்காக செயற்படுவதன் மூலம் எதிர்கால சந்ததிகள் சமாதானமாக வாழ வழிவகுக்கும்.
அண்ணலார் நபிகள் நாயகம் சொன்னதிற்கு இணங்க ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் கலிமா சொன்ன முஸ்லிமாக இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும், ஒருவரை ஒருவர் மேடை போட்டு ஏசுவதும் பேசுவதுமாய் இருத்தல் கூடாது. மனிதனின் குறைகள் மறைக்கப்பட வேண்டும்.
அரசியலை அண்ணலார் கற்றுத்தந்தார், மார்க்கத்தின் அடிப்படையில் அரசியல் செய்யப்படவேண்டும் எமது பயணம் கிலாபத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். இன்று இலங்கை முஸ்லிம்கள் காணிகளை இழந்து பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதனை தடுக்க நாம் ஒருமித்த குரலாக செயற்படுவதன் மூலம் வெற்றிகளை அடைய முடியும். இறைவன் அனைத்திற்கும் வழிசமைப்பானாக. ஆமீன்