- ரஸானா மனாப்-
அமெரிக்க நீதித்துறை வரலாற்றில் முதல் முஸ்லீம் பெண் நீதிபதியாக கடமையாற்றிய ஒருவர் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
65 வயதான ஷீலா அப்துஸ் ஸலாம் என்கின்ற பெண் நீதிபதியே இவ்வாறு கொல்லபட்டு நியூயோர்க் நகரத்தின் பிரபலமான ஆறான ஹட்சன் ஆற்றில் வீசபப்ட்டிருந்தார், இவரின் உடல் நேற்று அமெரிக்க நேரப்படி பகல் 1.45 க்கு ஆற்றிலிருந்து கரை சேர்க்கபப்ட்டது.
ஷீலா அப்துஸ் ஸலாம் சில வாரங்களுக்கு முன்பு அவர் வாழ்ந்து வந்த ஹார்லெம் நகர இல்லத்திலிருந்து காணாமல் போனதாக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து தேடுதல் நடவடிக்கையில் இறங்கிய போலீசார் நேற்று ஆற்றில் மிதந்த சடலத்தை கைப்பற்றியிருந்தனர்.
பொலிசார் வழங்கிய தகவலின் பிரகாரம் ஷீலா அப்துஸ் ஸலாம் கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் அவரின் உடலில் காணப்படவில்லை ஆகையினால் இது ஒரு தற்கொலை சம்பவமாக இருக்க கூடும் என்றும் நம்பப்படுகின்றது.
ஆபிரிக்க - அமெரிக்க கறுப்பினத்தவரான ஷீலா அப்துஸ் ஸலாம் இறுதியாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். அமெரிக்காவின் முதல் முஸ்லீம் பெண்மணி என்ற வரலாற்று பெயருக்கு சொந்தக்காரரும் கூட.
Post a Comment