Top News

மூதூர் மக்களும் போராட்டத்தில்

மூதூர் தள வைத்தியசாலையை தரத்திற்கு தரமுயர்த்தி தருமாறு கோரி 4வது நாளாக வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மூதூர், தோப்பூர், சம்பூர், சேருநுவர, பாட்டாளிபுரம், வெருகல் போன்ற பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இவ் வைத்தியசாலையே பிரதான வைத்தியசாலையாக காணப்படுகின்றது. எனவே இவ் வைத்தியசாலையை தரமுயர்த்தி தருவதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வாக்குறுதி வழங்கும் வரை போராட்டம் தொடருமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை ஜனாதிபதி நேற்றைய தினம் வாக்குறுதியளித்ததை அடுத்து கிண்ணியா மக்கள் முன்னெடுத்த வைத்தியசாலையை தரமுயர்த்தக் கோரும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
Previous Post Next Post