கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும் அசாதாரண சூழலை தவிர்க்கவும் அமெரிக்காவிற்கு உதவும் வகையிலும் பிரான்ஸ் நாட்டு போர்க்கப்பல் ஜப்பான் நாட்டிற்கு வந்தடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுடையே நிலவி வரும் அசாதாரண சூழலை தவிர்க்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகள் ஏற்கனவே தென் கொரியாவில் ராணுவ பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க கூட்டுப்படையில் ஓர் அங்கமாக விளங்கும் பிரான்ஸ் நாட்டின் போர்க்கப்பலும் தற்போது இதில் பங்கேற்க தயாராக உள்ளது.
இதன் முதற்கட்டமாக பிரான்ஸ் நாட்டின் போர்க்கப்பல் ஒன்று நேற்று ஜப்பானில் உள்ள Sasebo துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், பிரித்தானியா ஆகிய நாடுகளுடன் இணைந்து பிரான்ஸ் நாடும் தற்போது ராணுவ பயிற்சியில் ஈடுப்பட உள்ளது.
இந்த பயிற்சியானது மே 3-ம் திகதி முதல் மே 22-ம் திகதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
பிரித்தானியாவை சேர்ந்த 60 வீரர்கள், ஜப்பானை சேர்ந்த 220 வீரர்கள் உள்ளிட்ட 700 ராணுவ வீரர்கள் இந்த ராணுவ பயிற்சியில் ஈடுப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஜப்பான் நாட்டை சேர்ந்த Joint Staff என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கூட்டணி நாடுகளின் பலத்தையும் நம்பிக்கையையும் உறுதி செய்யும் வகையில் இந்த ராணுவப் பயிற்சி அமைய உள்ளதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.