மாவில்லு முறைகேடான பிரகடனமும் எமது முறைப்பாடுகளும்.
பூட்டுப்போடப்பட்டுள்ள அரச செவிக்கு முன்னில் தாய் நாட்டில்அகதியான நாம்
ஆட்சியை மாற்றி அவர்களை ஆசனத்தில் அமர்த்திவிட்டு ஆர்ப்பட்டம்செய்கிறோம் உரிமை வேண்டி, என்ன மாதிரியான ஜனநாயகம்இது........?
கடந்த 30 வருட யுத்தத்தின் மூலம் வடக்கு முஸ்லிம்களின் 2 தலைமுறையினரின் கல்வி, கலைக் கலாச்சாரம் பொருளாதாரம், அரசியல், உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்று பல துறைகளும்பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லைஎன்பது தெளிவாகக் தெறிகிறது.
1990ம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட எம் மக்கள் 2010களில்மீண்டும் தாயகம் திரும்பிய நிலையில் 2017 மார்ச் மாதம் 24ம் திகதிஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு இந்த ஜனநாயக நாட்டின்தலைகுனிவேயாகும்.
வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள முசலிப்பிரதேசத்தின் பெரும் பகுதிகளான மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பிரதேசங்களை பாதுகாக்கப்பட்டவனங்களாக இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் '3அ' பிரிவின் கீழ் 'மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்' எனபிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு 24.03.2017 கெளரவ ஜனாதிபதி தனது ரஷ்ய விஜயத்தின் போது கையொப்பமிட்டார்.
இது ஒரு முறைகேடான அறிவிப்பேயாகும்.
காடுகளின் எல்லைகளை மாற்ற வேண்டுமாயின் வன பாதுகாப்புகட்டளை சட்டத்துக்கமைய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரால்தயாரிக்கப்பட்ட உத்தரவு ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டு,பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு வர்த்தமானியில்வெளியிடப்பட்ட பின்னரே மேற்கொள்ளலாம். ஆனால் இந்த ஒழுங்கைமீறியே இது நடந்தேறியிருக்கின்றது என்பதன் மூலம் சில இனவாதிசக்திகள் நாட்டின் அரசை திரைக்குப் பின்னால் இருந்துகொண்டுநிருவகிக்கின்றது என்பது மட்டும் வெளிப்படையாக தெரிகிறது.
இவ் அறிவித்தலை எதிர்த்து கடந்த 19 நாட்களாக மரிச்சிக்கட்டிபள்ளிவாயல் முற்றத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாங்கள் தொடர்ந்தேர்ச்சயாகமேற்கொள்ளப்பட்டு வருகிறது, ஆனால் இதுவரை பாதிக்கப்பட்டஎம்மக்களின் குரல் அரச இயந்திரத்திற்கு சென்றடையாமல் இருப்பதுகவலைக்கிடமான செய்தியாகும்.
பூட்டுப்போடப்பட்டுள்ள அரச செவியை சென்றடைவதற்கு தேவையானஅல்லது சரியான / சத்தமான குரல் இன்னும் உயர்த்தபடவில்லைபோலும் சிந்திக்கத்தோன்றுகிறது.
எல்லா ஊடகங்களும் இச்செய்தியை பிரசுரித்து, மனித உரிமைஆணையகத்திற்கு மனுக்கொடுத்தும் இந்த விடயம் கவனத்தில்எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றால் இன்னும் ஒரு மாதம் எம்போராட்டம் தொடர்ந்தாலும் வெற்றிகரமான எந்த பதிலும்கிடைக்கப்போவதில்லை.
“2017 உரிமைப் பிரகடனம்” என்ற தொனியில் எமது பயணத்தை வேறுபுதிய திசையில் ஆராம்பிக்கவேண்டும்.
1. வில்பத்து முசலிப் பிரச்சினை ஒரு தேசிய பிரச்சினை என உலகிற்குதெரியப்படுத்தும் பாரிய பிரச்சாரம் ஒன்றை மேற்கொள்ளவேண்டும்,
2. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மரிச்சிக்கட்டி கிராமத்தைத்தாண்டி நாட்டின் ஏனைய முக்கிய பிரதேசங்களில் கவனயீர்ப்புஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அரசியல் சிவில் சமூகம்முன்வரவேண்டும்,
3. அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உருப்பினர்களும் ஒன்றிணைந்தஜனாதிபதியுடனான சந்திப்பொன்றை வெகுவிரையில் மேற்கொள்ளவேண்டும்,
4. ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இவ்வர்த்தமானி அறிவித்தலைவாபஸ்பெற காலக்கெடு ஒன்றை நிர்ணயிக்க வேண்டும்,
5. அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உருப்பினர்களும் ஒன்றிணைந்துஎடுக்கப்படுகின்ற முடிவு ஆளும் அரசை சிந்திக்கத்தூண்டும் எடுகோலஅமையச்செய்யும்.
6. எம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லா சிவில்அமைப்புக்களும் ஒன்றிணைந்த கோரிக்கை ஒன்றை நோக்கிபயணிக்கவேண்டும்.
7. எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை நம் பிரச்சினைகளுக்கு நல்லபதிலைத் தரும் சந்தர்ப்பமாக மாற்றவேண்டும்.
மாற்றங்கள் தேவை
இஸ்ஸதீன் றிழ்வான்
Post a Comment