இலங்கையில் கொடிய யுத்தம் ஒன்று இடம்பெற்று முடிந்திருக்கும் தருவாயில் பகையை மறப்போம் என்று பலரும் பேசினாலும் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்களை மறந்துவிட முடியாது, அவர்கள் எங்கள் உடன்பிறப்புகளை கொன்றழித்தவர்கள் என கண்ணீர் மல்க கூறினார் சமூக சிந்தனையாளர் சிராஜ் மசூர்,
இலங்கை; இது பகை மறப்பு காலம் எனும் நுால் வெளியீட்டு விழா இன்று தைக்காநகரில் இடம்பெற்றது, நுாலாசிரியரான சிராஜ் மசூர் நிகழ்வின் இறுதியில் உரையாற்றும் போதே இந்தக் கருத்தை தெரிவித்தார்,
மேலும் உரையாற்றிய சிராஜ்,
சிலிண்டர் தாக்குதல்களை முஸ்லிம் பகுதிகளுக்குள் நடாத்திய புலிகள், மரத்திலும் போஸ்ட்களிலும் கட்டிவைத்து கழுத்தை அறுத்ததை கண்களால் பார்த்து இரத்தக் கண்ணீர் வடித்த ஒரு சாதாரண பொதுமகன் என்ற அடிப்படையில் இந்த விடயங்களை கூற எனக்கு உரிமையுண்டு. புலிகள் செய்ததை யாரும் மறந்துவிட முடியாது.
ஆனாலும் இது பகை மறப்பு காலம், சாதாரண தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யவில்லை, அப்படி நினைக்கவும் இல்லை. பின்னிப்பிணைந்து ஒன்றோடு ஒன்றாக இருந்து வந்த வரலாறு இருக்கிறது. போருக்கு முன்னரான சூழலை உருவாக்க வேண்டும் இது தான் இன்று தேவை என்றார்.
Post a Comment