வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட பிரதமர், இன்று அவசரமாக நாடு திரும்பவுள்ளாதாக கூறப்படுகிறது.
மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவினால், ஏற்பட்ட அனர்த்தம் காரணமாகவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அவசரமாக நாடு திரும்பவுள்ளாதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வியட்நாமிற்கு,கடந்த ஞாயிற்றுகிழமை சென்ற பிரதமர் நாளை புதன்கிழமை, நாடு திரும்புவார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொலன்னாவை மீதொட்டுமுல்ல பகுதியில் குப்பை மேடு சரிந்து விபத்துக்குள்ளானது, இதன் காரணமாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.