Top News

ரிசாதிடம் மீள்குடியேற்ற இணைப்பாளர் மௌலவி பி.ஏ.எஸ் சுபியான் வேண்டுகோள்

பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள், இது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அபிப்பிராயங்களை இம் மாவட்டங்களை பாரம்பரியமாகக் கொண்ட புத்திஜீவிகள், சமூக சேவையாளர்கள், அரச சேவையாளர்கள், வர்த்க சமூகத்தினர் மற்றும் இளைஞர் யுவதிகள் பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.


வடமாகாண முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கான விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இச் செயலணி ஊடாக மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. 

யுத்த சூழ்நிலையால் நாம் வாழ்ந்த நமது பாரம்பரிய பிரதேசங்கள் சின்னாபின்னமாகிக் கிடந்ததை பல உட்கட்டுமான வேலைத்திட்டங்கள் மூலம் நாம் மீளக் கட்டியெழுப்பி வருவதை அறிவீர்கள். இதன் தொடர்ச்சியாக தற்போது வர்த்தக கைத்தொழில் அமைச்சர் கௌரவ ரிஷhத் பதியுத்தீன் மற்றும் அமைச்சர்கள் ஊடாகவும் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன் மொழிவுகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

தற்போது கௌரவ அமைச்சர் ஊடாகவும் இதற்கான முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் திட்ட முன் மொழிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றது.  எனவே ஆர்வமுள்ளவர்கள் தூர நோக்குப் பார்வையுடன் நமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கான திட்டங்களை எழுதி இரு வாரங்களுக்குள் 83, நாவலர் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மக்கள் பணிமனைத் தலைவரும் யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், தற்போது கௌரவ அமைச்சர் ரிசாத் பதியுத்தீனின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட மீள்குடியேற்ற இணைப்பாளருமான மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான் கேட்டுள்ளார்.


மேலும் இருநூறு வீடுகள் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களுக்கும் நூறு வீடுகள் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களுக்கும் வடக்கு மீள்குடியேற்ற செயலணியால் இவ்வருடம் 2017 ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வீடுகள் சொந்த மாவட்டங்களில் சொந்த காணியுள்ள மீள்குடியேற்றத்திற்காக தங்களுடைய மாவட்ட பிரதேச செயலகங்களில் பதிவு செய்தவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

எனினும் கூடுதலானவர்கள் தங்களுடைய மீள்குடியேற்றப் பதிவை செய்து விட்டு தாங்கள் இடம்பெயர்ந்த போது வசித்த மாவட்டங்களிலேயே தற்போதும் இருந்து வருகின்றனர்.
வெளி மாவட்டங்களில் வசித்துக் கொண்டு சொந்த மாவட்டங்களில் இது வரையில் வீடுகள் கிடைப்பெற்று வேலைகளைப் பூர்த்தி செய்துவிட்டு வீட்டைப் பூட்டி விட்டு சென்றுவிட்டதினால் இம்முறை அவ்வாறான நிலையில் இருப்பவர்களுக்கு வீடுகளை வழங்குவதில் அதிகாரிகள் பின்வாங்குகின்றார்கள்.

எனவே வீடுகள் கிடைக்கப்பெற்றவர்கள் தங்களுடைய சொந்த மாவட்டத்திலேயே வசிப்பதை தொடர்ச்சியாக கொண்டிருக்க வேண்டும் என முழுமையாக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் உங்களிடமிருந்து ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post