Headlines
Loading...
முசலி பாதுகாப்பு வன வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக கொழும்பில் ஒன்றுகூடல்

முசலி பாதுகாப்பு வன வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக கொழும்பில் ஒன்றுகூடல்

முசலி பாதுகாப்பு வன வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஆராய்வதற்கான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேரவை இன்று மாலை (05 ஆம் திகதி) கொழும்பில் கூடவுள்ளது. 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடனான இந்த ஆலோசனை மன்றத்தில் துறை சார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், மற்றும் தேசிய முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். 

வட மாகாண முஸ்லிம்களின் பலவந்தமான வெளியேற்றம் தொடக்கம் புதிய வர்தமானி அறிவித்தல் வரையான காலப்பகுயில் முஸ்லிம்களின் மீள் குடியேற்ற உரிமைகள் எவ்வாறு மறுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தொகுப்பினை பேராசியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் முன்வைக்கவுள்ளதுடன், சட்டவரையறைக்குள் இந்த வர்த்தமானி அறிவித்தலை எதிர்கொள்ள முடியுமான உத்திகள் பற்றி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் விளக்கவுள்ளார். 

தேசிய ஷுரா சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உப குழு பாராளுமன்ற உறுப்பினர்களுடனான இந்த தொடர்ச்சியான அமர்வுகளை  ஏற்பாடுசெய்துவருகின்றது. இந்த அமர்வில் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் கூட்டாக இணைந்து பல முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளது. 

0 Comments: