எகிப்தின் கெய்ரோ நகரில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை அடுத்து அங்கு 3மாத காலத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் ஜனாதிபதி அப்துல் படா அல் சீசயினால் இந்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கெய்ரோவின் தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்44 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த அவசரகால நிலையின் போது தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையினை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் எகிப்து அரசு தெரிவித்துள்ளது.
நன்றிகள் live360
Post a Comment