Headlines
Loading...
அதாவுல்லாஹ்வின் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது

அதாவுல்லாஹ்வின் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது

கடந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த முன்னால் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் கடந்த சில வாரங்களாக கிழக்கு மாகாணத்தில் பல்வேறு  பிரதேசங்களில் சுதந்திர கிழக்கு எனும் நிகழ்வுகளை நடாத்தி கிழக்கு மாகாணம் வடக்கோடு இணைக்கப்பட போகின்றது என்ற ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதனை காண முடிகின்றது. இது ஒரு அப்பட்டமான பொய் இதற்கு ஒரு போதும் முஸ்லிம் காங்கிரஸ் துணை போகாது என்று முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய போராளிகளில் ஒருவரான அன்வர் நௌஷாத் சற்று முன்னர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் அதாவுல்லாஹ் என்கின்ற தனிமனிதன் மக்கள் மனதிலிருந்து எப்படி எடுக்கப்பட்டார் அவர் எவ்வாறு தோற்றார் என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம். தனது ஊரான அக்கறைப்பற்றை மாத்திரம் தாங்கிய அபிவிருத்திகளை அதிகம் அதிகம் செய்து அதே அக்கறைப்பற்று மக்களால் தோற்கடிக்கப்பட்ட அதாவுல்லாஹ் மீண்டும் மேடைகள் போட்டு எவ்வளவு கூக்குறலிட்டாலும் வென்று விட முடியாது. அவரால் அக்கறைப்பற்று மாநகர சபையை மாத்திரம் கைப்பற்ற முடியுமே தவிர மாகாண சபையில் அவரது கட்சி சார்பில் ஒரு உறுப்பினைரையேனும் அவர் பெற்று விட முடியாது. இதுதான் இன்று இருக்கும் நிலை. அதை விட்டு அவர் போலியான பிரச்சாரங்களை நோர்வே என்று கூறி அதுமாத்திரமின்றி இன்று நடக்கின்ற நல்லாட்ச்சிக்கு எதிராக அவருடைய விஷமக் கருத்துக்களை பரப்பி வருவது மிகவும் கவலையளிக்கிறது.

முஸ்லிம் கட்சிகளில் ஒன்றான தேசிய காங்கிரஸ் முஸ்லிம்களின் இருப்பைப் பற்றி எப்போதும் சிந்தித்து இருப்பதில்லை. உதாரணமாக வட்டமடு பிரச்சினையில் எந்தவித தலையீடம் செய்யவில்லை அம்பாறை மாவட்டத்தில் 35000 ஏக்கர் காணிகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு எந்தவித தீர்வையும் கொடுத்து விடவில்லை நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தின் எந்த ஒரு முடிவையும் அவர்களுக்கு கொடுத்து விடவில்லை பொத்துவில் முதுமகா விகாரை அமைக்கும் போது அதற்கு அவர் எந்தவித தீர்வையும் அவர் கொடுத்து விடவில்லை இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்து விட்டு மஹிந்த அரசில் செல்லப் பிள்ளையாக இருந்து விட்டு இன்று இப்படி பேசுவது மிகவும் கேலித் தனமாக இருக்கின்றது.

தயவு செய்து முன்னால் அமைச்சரும் அவருடைய சஹாக்களும் பேஸ்புக்கில் எழுதுவது அல்லது ஊடகங்களில் விஷமக் கருத்துக்களை பரப்புவதை நிறுத்தி விட்டு முஸ்லிம்களின் எதிர்கால நலனுக்காக சிந்திப்பதில் அதிக கரிசணை கொள்ளுமாறு  கேட்டுக் கொள்வதோடு எதிர்கால முஸ்லிம் அரசியலில் பாரியதொரு மாற்றத்தினை உண்டு பன்னும் ஒரு கட்சியாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸை ஏசுவதும் பேசுவதுமாய் இருக்காமல் உங்களுடைய கட்சியை வளர்ப்பதற்கு பாடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அதுமாத்திரமின்றி முஸ்லிம் காங்கிரஸ் என்பது நீங்கள் வளர்ந்த பாசறை வளர்ந்த படித்த பாசறையை ஏசுவது என்பது மிகவும் கேலித்தனமாக இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸை யாரும் அசைத்து விட முடியாது. அதாவுல்லாஹ் என்கின்ற அவருடைய கட்சி அக்கறைப்பற்றுக்குள் மாத்திரம் தங்கி இருப்பதை எங்களால் அவதானிக்க முடிகிறது. இப்பொழுதிருக்கும் மாகாண சபை உறுப்பினர்களுள் எவராவது அடுத்த மாகாண சபையில் வெற்றி பெறுவாராக இருந்தால் அது அவருக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி இது ஒரு எட்டாக் கனியாகவும் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.