Top News

அக்குரணைக்கு விடிவு எப்போது?



அஸ்ஸலாமு அலைக்கும். 

அக்குறணையில் இஸ்லாமிய அறிவாளிகள் இல்லையா? என்று நினைக்க வைக்கிறது ஆண்கள் பாடசாலை அமைக்கும் விடயத்தில் அக்கறை இன்மையை பார்க்கும் போது ! முஸ்லிம்கள் தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு பாடசாலைகள் ஏற்படுத்தனும் துரதிஷ்டம் முஸ்லிம்கள் மத்தியில் தான் கலவன் பாடசாலைகள் உண்டு,கத்தோலிக்கர்கள் தனித்தனியாக ஆண்கள் வேறு பெண்கள் வேறாக என்று எமது பாட்டன்(100 வருடங்களுக்கு முன்பிருந்தே) காலத்திலேயே அமைத்து விட்டார்கள்., நாம் ……….. ??? !!! 

அக்குறணை சாஹிரா தேசிய பாடசாலையை பெண்கள் பாடசாலையாக மாற்றமடையச்செய்யும் போது மாற்று வழி அஸ்ஹர் தேசிய பாடசாலையை ,!ஆண்கள் பாடசாலையாக மாற்றுவது தான் ஆனால் இது வரையும் ஓர்,இருவர் தவிர ஏனையவர்களின் மௌனம் …….. ? பஸாருக்கு கிட்ட இருக்கும் பாடசாலை பெண்கள் பாடசாலையாக இருப்பதில் பல சீர்கேடுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம் ஆகவே ஊருக்குள் பெண்கள் பாடசாலை அமையும் போது பல நன்மைகள் இருக்கிறது ஆகவே அக்குறணை சாஹிரா தேசிய பாடசாலையின் அமைவிடம் சரியானதாக இருக்கும், மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பானதாக அமைத்துக்கொள்ள முடியும் அதற்குரிய எல்லா அமைப்பும் அங்கு இருப்பதோடு அல்லாஹ் அக்குறணை மக்களுக்கு கொடுத்திருக்கும் செல்வம் போதுமானதாகும் (வருடத்துக்கு 25 இலட்சம் ஸகாத் கொடுக்க தகுதி உள்ளவர்கள் 200க்கும் அதிகமாகும்) சரியான வழிகாட்டல்,திட்டமிடல் இருந்தால் அக்குறணை பாடசாலைகளை உலக தரத்துக்கு எடுத்துச்செல்லலாம், இங்கு ஒரு முக்கியமாக ஒரு வேண்டுகோள் விடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறேன் அதாவது ” அரசியல் செய்பவர்கள் அரசியலை செய்யுங்கள் இதற்குள் நுழையாதீர்கள் அது போன்று இயக்கங்கள் ,மஸ்ஜிதுகள் , மத்ரஸாக்கள், மற்றும் பொது அமைப்புகளில் ஈடுபட விரும்புபவர்கள் அவைகளில் உங்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள் பாடசாலைகள் விடயத்தில் மட்டும் ஈடுபட விரும்பும் இளையவர்கள் ஒரு சில மூத்தவர்களின் துணையோடு இணைந்து இந்த ப்ராஜெக்ட்டை அல்லாஹ்வின் திருப்தியை முன் வைத்து ஒன்று இணையுங்கள். 

இதற்கு ஒரு நிர்வாக கட்டமைப்பு மிக மிக முக்கியம் (அந்த நிர்வாக கட்டமைப்புக்கு ஒரு ஆபிஸ், அந்த ஆபிஸில் வேலை செய்யும் எல்லோருக்கும் சம்பளம் மற்றும் ஏனைய வசதிகள்) எமது ஊரில் அதிக இலாபம் எடுக்க பலர் முன்வருவர் இதுவும் அதிக இலாபம் உள்ள ஒரு முன்னெடுப்பு இன்ஷா அல்லாஹ் பல இஸ்லாமிய அறிவாளிகள் எமது சமூகத்துக்கு கிடைப்பார்கள். தகுதியானவர்களும், ஆர்வம் உள்ளவர்களும் முன்வாருங்கள் இரண்டு கிழமைகள் தொடர்ந்து ஈடுபட்டால் ஒரு நிர்வாக கட்டமைப்பை அமைத்து விடலாம்.(எங்களிடம் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், நிர்வாகிகள் நிறைய இருக்கிறார்கள்) இந்த செய்தியை அக்குறணை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பை நானும் நீங்களும் செய்வோம் அல்லாஹ் எங்களின் இந்த முயற்ச்சியை நிறைவேற்றித்தருவனாக. 


Nasruthdeen Seyed

Post a Comment

Previous Post Next Post