Top News

சுகாதார அதிகாரிகளின் அனுமதி பெற்றே கந்தூரி உணவு சமைக்கலாம்

எதிர்வரும் காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் நடைபெறும் கந்தூரி போன்ற விசேட நிகழ்வுகளின்போது  பிரதேச சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி பெற்றே உணவு சமைக்கப்பட்டு பகிரப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை - இறகாமம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உணவு ஒவ்வாமை பலர் பாதிக்கப்பட்டிருந்தனர்.  இந்த சம்பவம் தொடர்பில் கல்முனை மாநகர சபையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஷிர் அஹமட் தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.  இதன்போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குகின்றமை, வைத்தியசாலைகளிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு, வைத்தியசாலைகளிலுள்ள மருத்துவ வசதி குறைப்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இறகாமம் உணவு ஒவ்வாமை சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடாத்தி, விரைவில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
Attachments area

Post a Comment

Previous Post Next Post