சீனாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான சட்டத்திட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனடிப்படையில், முஸ்லிம் கடும்போக்குவாதத்தை தடுப்பதற்காகவே இவ்வாறான சட்டங்கள் அமுலாக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீளமாக தாடி வளர்த்தல், ஹிஜாப் அணிதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சீனாவின் சின்சியாங் மாகாணத்தில் இந்த புதிய விதிகள் அமுலாக்கப்பட்டுள்ளன.
இந்த மாகாணத்திலேயே உய்கர்ஸ் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
தங்களுக்கு எதிராக பாரிய இடர்கள் ஏற்படுத்தப்படுவதாக அவர்கள்
தெரிவிக்கின்றனர். மேலும், அவர்களில் சிலர் ஆயுதக்குழு ஒன்றாக செயற்படுவதுடன், சீனாவில்
பல்வேறு கத்திக்குத்து தாக்குதல்களையும் நடத்தி இருக்கின்றமை
குறிப்பிடத்தக்கது.