Top News

பராக்­கி­ரம மன்­னரின் காலம்முதல் முசலியில் முஸ்லிம்கள் வசிப்பதாக வரலாற்று ஆய்வு




எம்.ஆர்.எம்.வஸீம் 

முசலி பிர­தே­சத்தில் 6 ஆம் பராக்­கி­ரம மன்னர் காலத்தில் இருந்து முஸ்­லிம்கள் அங்கு குடி­யி­ருந்து வரு­கின்­றனர். எனவே வில்­பத்து வன பாது­காப்பு வலயம் தொடர்­பாக ஊட­கங்கள் ஒரு­த­லைப்­பட்­ச­மாக நடக்­கக்­கூ­டாது. இரு தரப்­பி­ன­ரதும் விளக்­கங்­க­ளையும் பொது மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­த­வேண்டும் என நவ சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்று -05 கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­தெ­ரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

முசலி பிர­தே­சத்தில் 6 ஆம் பராக்­கி­ரம மன்னர் காலத்தில் இருந்து முஸ்­லிம்கள் அங்கு குடி­யி­ருந்து வரு­கின்­றனர்.அந்த காலப்­ப­கு­தியில் போர்த்து கீசர்கள் முஸ்­லி­களின் பள்­ளி­வா­சல்­களை உடைத்து அந்த மக்­களை  விரட்­டினர். அப்­போது முஸ்­லிம்கள் மன்­னரின் அனு­ம­தி­யைப்­பெற்று வில்­பத்து மற்றும் கண்டி போன்ற பிர­தே­சங்­களில் குடி­யே­றினர்.அதனால் அந்த மக்­களின் இருப்­பி­டத்தை பாது­காப்­பது அர­சாங்­கத்தின் கடமை.

அத்­தடன் வில்­பத்து பிர­தே­சத்தை சுற்­றி­யுள்ள பிர­தே­சங்­களில் மக்கள் வாழ்ந்து வந்­துள்­ளனர். யுத்த காலப்­ப­கு­தியில் விடு­தலை புலி­களால் அங்­கி­ருந்த மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டனர். யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் அந்த மக்­களை மீள குடி­யேற்­று­வ­தற்கு கடந்த அர­சாங்­கத்தில் இருந்த அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை எடுத்து வந்­ததன் அடிப்­ப­டை­யி­லேயே மக்கள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.

ஆனால் வில்­பத்து வன பாது­காப்பு வலயம் தொடர்­பாக ஜனா­தி­ப­தியின் வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் அங்கு மீள்­கு­டி­யேற்­றப்­பட்ட மக்கள் தற்­போது மன­வே­தனை அடைந்­துள்­ளனர்.

மேலும் வில்­பத்து வன பிர­தேசம் தொடர்­பாக இன்று மிகவும் அக்­க­றை­யுடன் சிலர் கருத்து தெரி­வித்து வரு­கின்­றனர். வன பிர­தே­சங்கள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும்.

அதில் எந்­தப்­பி­ரச்­சி­னையும் இல்லை. ஆனால் ஏற்­க­னவே குடி­யி­ருந்த மக்கள் பாதிக்­கப்­பட்டு அங்­கி­ருந்து வெளி­யே­றிய நிலையில் அந்த பிதேசம் தற்­போது வனாந்­தி­ர­மாக இருந்­த­தனால் அத­னையும் வன பாது­காப்பு வல­யத்­துக்குள் சேர்க்க முடி­யாது. 

அத்­துடன் இந்த விடயம் தொடர்­பாக சில தனியார் ஊட­கங்கள் வில்­பத்து தொடர்­பாக கருத்து பரி­மா­று­வ­தற்­காக ஒரு பக்­கத்­தைச்­சேர்ந்­த­வர்­களை மாத்திரம் அழைத்து வந்து உரையாடுகின்றனர்.

இது முறையாகாது.மாறாக இரு தரப்பினரையும் அழைத்து தங்கள் விளங்கங்களை மக்களுக்கு தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் பொது மக்கள் அதன் உண்மைத்தன்மை தொடர்பாக அறிந்துகொள்ள முடியும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post