1. காய்ச்சல் ஏற்பட்டதிலிருந்து 48 மணித்தியாலங்களுக்கு பிறகு, புள் பிBளட் கவுண்ட் (Full Blood Count-FBC ) பரிசோதனை செய்தல் , அத்தோடு 3ம் , 4ம் , 5ம் நாட்களிலும் இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.
2. புள் பிளட் கவுண்ட்(FBC) ரிப்போர்ட் இல் பிளேட்டிலட்(Platelets – Plt) எனும் குருதிசிறுதட்டுக்களின் எண்ணிக்கை 130 ஐ விட குறைவடைந்தால் வைத்திய சாலையில் கட்டாயம் அனுமதித்தல்.
3. எந்தக்காரணம் கொண்டும் காய்ச்சலைக் குறைப்பதற்காக டைக்குளோபெனக் ( diclofenac ) , புரூபன் (brufen),மெபெனமிக் அசிட் (mefenamic acid) போன்ற மருந்துகளை பாவித்தல் கூடாது.
இம்மூன்று விடயங்களையும் சரிவர பின்பற்றுவதனால் டெங்கு மரணம் ஏற்படுவதை தவிர்க்கமுடியும் அது பற்றிய பூரண விளக்கத்தை கீழ் உள்ளவற்றை வாசிப்பதன் மூலம் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள் .
டெங்கு காய்ச்சலானது டெங்கு வைரசினால் ஏற்படுத்தப்படுகிறது, இந்த காய்ச்சலில் உயிரை பறிக்கக்கூடிய ஒரு நிலை சிலரில் ஏற்படுகிறது ஆனால் இந்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு மரணம் ஏற்படுவதை தடுப்பதற்கான மிகச்சிறந்த , பாதுகாப்பான வைத்திய முறை இன்று காணப்படுகின்றது.
அவ்வாறு இருந்த ஏன் மரணம் ஏற்படுகின்றது?2. புள் பிளட் கவுண்ட்(FBC) ரிப்போர்ட் இல் பிளேட்டிலட்(Platelets – Plt) எனும் குருதிசிறுதட்டுக்களின் எண்ணிக்கை 130 ஐ விட குறைவடைந்தால் வைத்திய சாலையில் கட்டாயம் அனுமதித்தல்.
3. எந்தக்காரணம் கொண்டும் காய்ச்சலைக் குறைப்பதற்காக டைக்குளோபெனக் ( diclofenac ) , புரூபன் (brufen),மெபெனமிக் அசிட் (mefenamic acid) போன்ற மருந்துகளை பாவித்தல் கூடாது.
இம்மூன்று விடயங்களையும் சரிவர பின்பற்றுவதனால் டெங்கு மரணம் ஏற்படுவதை தவிர்க்கமுடியும் அது பற்றிய பூரண விளக்கத்தை கீழ் உள்ளவற்றை வாசிப்பதன் மூலம் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள் .
டெங்கு காய்ச்சலானது டெங்கு வைரசினால் ஏற்படுத்தப்படுகிறது, இந்த காய்ச்சலில் உயிரை பறிக்கக்கூடிய ஒரு நிலை சிலரில் ஏற்படுகிறது ஆனால் இந்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு மரணம் ஏற்படுவதை தடுப்பதற்கான மிகச்சிறந்த , பாதுகாப்பான வைத்திய முறை இன்று காணப்படுகின்றது.
அதிக மரணங்களுக்கான காரணம் மேற்குறிப்பிட்ட விடயங்களில் நமது கவலையீனம், அசமந்தப்போக்குகளாகும் .
1. காய்ச்சல் ஏற்பட்டதிலிருந்து 48 மணித்தியாலங்களுக்கு பிறகு, உடனடியாக புள் பிBளட் கவுண்ட் (Full Blood Count-FBC ) பரிசோதனை செய்யாது விடுதல் காரணமாக டெங்கு மரணங்கள் ஏற்படுவதில் பலர் அடங்குகின்றனர்
உதாரணமாக….
சிலர் எனக்கு இருமல் தடிமல் காய்ச்சல் தான் , டெங்கு காய்ச்சலாக இருக்காது என இப்பரிசோதனையை செய்யாது விடுகின்றனர்.
சிலர் 2ம் நாளில் இப்பரிசோதனை செய்து விட்டு அப்பரிசோதனை நோர்மல் தான் அதனால் 3ம் , 4ம் நாட்களில் செய்யாது விட்டுவிடுகின்றனர்.
சிலர் ஊசி குத்த முடியாது இரத்தம் எடுக்கும் போது பிள்ளை அழுகின்றான் என்று இப்பரிசோதனையை தொடர்ச்சியாய் 3ம் , 4ம் ,5ம் நாட்களில் செய்வதை தவிர்ந்து விடுகின்றனர்.
சிலர் தேவையில்லாமல் காய்ச்சலின் 1ம் நாளில் , 48 மணித்தியாலங்கள் முடிவதற்குள் இரத்தப்பரிசோதனை 2 /3 தடைவைகள் செய்துவிடுகின்றனர் இதனால் தேவையான போது செய்வதற்கு தயங்கி செய்யாது விடுகின்றனர்.
சிலர் காய்ச்சல் விட்டுவிட்டது தானே இனி இரத்தப்பரிசோதனை தேவை இல்லை என வைத்தியரின் அறிவுறுத்தலை தாங்களாகவே நிராகரித்து விடுகின்றனர்.
சிலர் 4ம் நாள் காய்ச்சலோடு வைத்தியரிடம் வருவர், இரத்தப்பரிசோதனை செய்து வாருங்கள் என்று ஒரு பரிசோதனை துண்டை கொடுத்து , இப்போது பரிசோதித்துக்கொண்டு வாருங்கள் என்று அனுப்பினால், சரி டொக்டர் எடுத்து வருகின்றேன் என்று போய்விடுவர் , பின் அடுத்த நாள் ரிப்போர்ட்டோடு , மிகவும் அபாய நிலையில் நோயாளியை கொண்டுவருவர். ஏன் இப்படி நடந்துகொண்டீர்கள் என்றால் போனோம் டொக்டர் பிள்ளை அழுது விட்டது வீட்டே சென்றுவிட்டோம் இன்று காலையில் தான் பரிசோதனை செய்தோம் என்பர் , அப்படியாயின் உடனடியாக ரிப்போர்ட்டை காட்டி இருக்கலாமே என்று சொன்னால் , பின்னேரம் 5 மணிக்குதான் ரிப்போர்ட் தந்தார்கள் என்பர் , அப்படியாயினும் உடனடியாக வந்திருக்கலாமே என்று கூறினால் ஏதாவது ஒரு காரணத்தை கூறுவார்கள் அதாவது நேற்று மாலை 6 மணிக்கு ரிப்போர்ட்டுக்காக அனுப்பப்பட்டவர்கள் இன்று இரவு 9 மணிக்குத்தான் ரிப்போர்ட்டோடு வருவார்கள், மிக மோசமான நிலையில் அந்த நோயாளி இருப்பார் , வைத்தியர் பதறிக்கொண்டு உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டும் என்றால் , வெளியால் வைத்து பார்க்க முடியாதா டொக்டர் என்பர் , பின் ஒருவழியாக கதைத்து , (ஏசி , பயமுறுத்தி) வைத்தியசாலைக்கு அனுப்பினால் 11 மணிக்குப் பிறகுதான் வைத்திய சாலையை அடைவர்.
அவசரமாக குறித்த நோயாளியை பெரிய வைத்தியசாலகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வசதிகள் குறித்த நேரத்தில் இல்லாமல் காணப்படும் உதாரணமாக அம்பியுலன்ஸ் பற்றாக்குறை,…. ,
சில பெரிய வைத்திய சாலைகளும் பல நிறை குறைகளைக் கொண்டிருக்கும் தேவையான மிகமுக்கியமான பரிசோதனைகள் கூட செய்ய முடியாமல் இருக்கலாம் எனவே நோய் வீரியமடைவதற்கு முன்னர் வைத்தியசாலைகளை அடைதல் வேண்டும் .
2. புள் பிளட் கவுண்ட்(FBC) ரிப்போர்ட் இல் பிளேட்டிலட்(Platelets – Plt) எனும் குருதிசிறுதட்டுக்களின் எண்ணிக்கை 130 ஐ விட குறைவடைந்தால் வைத்திய சாலையில் அனுமதிக்காது காலம் கடத்துவதாலும் மரணத்திற்கு இட்டுச்செல்கின்றது.
இவ்வாறான நிலைக்கு பல உதாரணங்களைக் கூறலாம்…
சிலர் பிளேட்டிளட் 130 ஐ விட குறைவடைந்த நோயாளியை வைத்திய சாலையில் வைக்ககோரினால் , இல்லை டொக்டர் வைக்க முடியாது, வீட்டில் பிள்ளை தனியாக இருக்கிறது, உம்மா தனியாக இருக்கின்றார் என்று ஏதாவது காரணம் கூறி , நாளை காலையில் வருகிறேன் என்பர் என்ன வழிமுறையை கையாண்டாலும் அவர்களை வைத்திய சாலையை நோக்கி அனுப்ப முடியாது. பின் மிக மிக அபாயகரமான நிலையில் வைத்தியசாலையை அடைவர்.
சில வேளைகளில் வைத்தியர்கள் , சில காரணங்களைக் கருத்தில் கொண்டு 150 மேற்பட்ட எண்ணிக்கையில் பிளேட்டிலெட் காணப்படும் போதும் வைத்தியசாலையில் அனுமதிப்பர் எனேவே உங்களை வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதிக்க கோரினால் கட்டாயம் செவி மடுங்கள்.
3. எந்தக்காரணம் கொண்டும் காய்ச்சலைக் குறைப்பதற்காக டைக்குளோபெனக் ( diclofenac ) , புரூபன் (brufen),மெபெனமிக் அசிட் (mefenamic acid) போன்ற மருந்துகளை பாவித்தல் கூடாது. ஆனாலும் சிலர் பாவித்து விடுகின்றனர் .
இவ்வகையான மருந்துகள் குளிசைகளாக , பாணி மருந்துகளாக , அல்லது , மலவாயில் வைக்கும் குளிசையாக காணப்படலாம்.
சிலர் டொக்டர் காய்ச்சல் மிக கடுமையாக இருக்கின்றது 2 தடவை மருந்து எடுத்துவிட்டேன் காய்ச்சல் 3ம் நாளாகவும் விடாமல் காய்கின்றது , என்று நீங்கள் மலவாயில் வைக்கும் அந்த குளிசையை தாருங்கள் என்பர் , அதற்காக கட்டாயப்படுத்துவர், எவ்வளவு எடுத்துக்கூறினாலும் கேட்காமல் எப்படியாவது வேறு பாமசிகளில் அல்லது போலி வைத்தியர்களிடம் சென்றாவது எடுத்து பாவித்துவிடுவர். பிள்ளைகளுக்கு காய்ச்சலுடன் வலிப்பு ஏற்படுபவர்களுல் அதிகமானவர்கள் இவ்வாறான பிழையான முறையை பின்பற்றுவர்.
4. பிழையான நம்பிக்கைகளினால் குறித்த நேரத்தில் வைத்திய ஆலோசனையை பெறத்தவறுதல் அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்காமல் காலம் கடத்துதல்.
போலி வைத்தியர்களிடம் மருந்துக்காக செல்லுதல்.
உண்மையென உறுதிப்படுத்தப்படாத(ஆங்கில வைத்தியமுறைகள் அல்லாத) வைத்தியமுறைகள் மூலம் குணப்படுத்தமுடியும் என நம்பி ஏமாற்றம் அடைதல்.
பிழையான உறுதிப்படுத்தப்படாத நம்பிக்கைகளினால் கவரப்பட்டு வைத்திய ஆலோசனையில் நாட்டமில்லாது விடல் ( உதாரணமாக பப்பாசிச்சாறு போன்றவை).
டெங்கு மரணங்களுக்கான பிரதான காரணங்களாக சொல்லப்படுபவை !
டெங்கு வைரசின் காரணமாக மரணமடைதல் என்பது மிக மிகக்குறைவாகும் , இவ்வாறு வைரசின் காரணமாக மரணமடைபவர்கள் , வைரசினால் மூளை தாக்கப்படுதல் (என்செபலோபதி) , இதயத்தசை அழற்சி (மயோகார்டைடிஸ்) போன்றவற்றினால் இறக்கக்கூடும். இவ்வாறான நிலைகளில் நோயாளியை உயிர்பிழைக்க வைப்பது மிகவும் போராட்டம் நிறைந்தது.
அனேகமான மரணங்கள் நிகழ்வதற்கான காரணம் இரத்தக்குளாய்களில் காணப்படும் இரத்தத்தில் காணப்படும் பாய்மம் , இரத்தக்குளாய்களைவிட்டு தசைகளுக்குள் வெளியேறுவதால் ஏற்படும் அதிர்ச்சி நிலமையாகும் (dengue hemorrhagic shock) இவ்வாறான மரணங்கள் மிக அதிகமாக ஏற்படுவதற்கான காரணம் சரியான நேரத்தில் வைத்தியசாலைக்கு நோயாளி கொண்டுவரப்படாமல் இருத்தலாகும். குறித்த நேரத்தில் வைத்தியசாலையில் வழங்கப்படும் சிறப்பான சிகிச்சைகள் இவ்வகை மரணத்தை 100 வீதம் தடுக்கக்கூடியவை.
சிலர் மூளை, தசைகள் , போன்ற அங்கங்களில் இரத்தக்கசிவு ஏற்படுவதனாலும் இறக்கின்றனர் இவ்வகையானவர்கள் , நாம் மேற்கூறிய மருந்துப்பொருட்களை பாவிப்பதனால் , வைத்திய சிகிச்சை பலனின்றி இறப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்
மேலும் சில ஆலோசனைகள் .
நாம் ஏற்கனவே கூறியவற்றுடன்…
I. காய்ச்சல் தொடங்கிய நாளில் இருந்து 5-6 நாட்களுக்கு தொடர்ச்சியாக வைத்திய ஆலோசனையுடன் இணைந்து இருங்கள். பொதுவாக காய்ச்சல் விட்டபிறகே(காய்ச்சல் ஏற்பட்ட 3ம் 4ம் நாற்களுக்கு பிறகு) டெங்கு காய்ச்சலின் அபாயகரமான நிலை ஏற்படுகின்றது என்பதை கவனத்தில் கொள்க.
II. வைத்தியர் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்து முடியுங்கள். உதாரணமாக உடனடியாக இரத்தப்பரிசோதனையை கோரினால் , உடனடியாக செய்து காட்டுங்கள்.
நாளை காலை இரத்தப்பரிசோதனையை கோரினால், காலையிலேயே செய்துகாட்டுங்கள் .
இவ்வாறு செய்து காட்டமுடியாவிட்டால் வைத்தியரிடம் ஆலோசியுங்கள் . காலையில் இரத்தமாதிரியை பெற்றுக்கொண்டு மாலை தான் ரிப்போர்ட் தருவோம் என்றால் அப்பரிசோதனை நிலையத்தில் பரிசோதனையை செய்யாமல் , உடனடியாக இவ்விரத்தப் பரிசோதனையை உடனடியாக செய்யக்கூடிய இடங்களுக்கு செல்லுங்கள் அல்லது இவ்விரத்தப் பரிசோதனை
வசதியுள்ள அரசு வைத்தியசாலைகளுக்கு செல்லுங்கல்.
III. இரத்தத்தில் 100 ஐ விட குறைவாக பிளேட்டிளட்ஸ் காணப்பட்டாலோ , அல்லது நோயாளியின் நோயின் தண்மை அதிகமாக காணப்பட்டாலோ அரசின் பெரிய வைத்தியசாலைகளில் (பயிற்சி வைத்தியர்கள் வேலைசெய்யும் வைத்தியசாலைகள்) வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதே சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறான நிலைகளில் நீங்கள் சிறிய வைத்தியசாலைகளில் வைத்திருக்கப்பட்டால் வைத்தியருடன் கலந்துரையாடி மாற்றத்திற்கு பரிந்துரையுங்கள் அல்லது வைத்தியர் உங்களை மாற்றுவதற்கு விரும்பினால் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.
IIII. வைத்தியசாலைகளுக்கு காலை நேரகாலத்தோடு செல்லுங்கள். சில வைத்தியசாலைகளில் தேவையான முக்கியமான பரிசோதனைகள் கூட தேவையான வேலைகளில் செய்துகொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது என்பதை மறந்து விடாதீர்கள். பொது விடுமுறைகள், ஞாயிற்றுக்கிழமைகளில் சில முக்கியமான விடயங்களை கையாள்வதில் பல இடர்பாடுகள் காணப்படும் என்பதை நினைவில் கொள்க உதாரணமாக ( ஆளனிக்குறைபாடுகள் , தேவையான பரிசோதனை செய்வதில் கட்டுப்பாடுகள் காணப்படலாம் ).
V. மருத்துவ வசதியை பெற்றுக்கொள்வதில் சிரமமுள்ளவர்கள் (அதாவது குக்கிராமங்களில் வசிப்போர்…) வைத்தியசாலைகளில் முன்கூட்டியே அனுமதியை பெற்றுக்கொள்ளுங்கள்.
VI. அரசு வைத்தியசாலைகள் தற்போது நிரம்பிக்காணப்படுவதால் நீங்கள் பொறுமையுடனும் , அவதானத்துடனும் செயற்படுங்கள் , உமது நோய்நிலமை சம்பந்தமாக வைத்தியரிடம் , தாதிமாரிடம் அடிக்கடி கேட்டு அறிந்துகொள்ளுங்கள். மிகவும் அதிகமான நோயாளர்கள் காணப்பட்ட போதும் அரசின் பெரிய வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் , தனியார் வைத்தியசாலைகளில் மிகக்கவனமாக அன்றி தங்கி சிகிச்சை பெறுவதை தவிர்ந்துகொள்ளுங்கள்.
VII. டெங்கு காய்ச்சலுக்கு உலகின் தற்போதைய, உறுதிப்படுத்தப்பட்ட மிகச்சிறந்த வைத்தியமுறையே எமது வைத்தியசாலைகளில் பின்பற்றப்படுகின்றது என்பதை நினைவிற்கொள்க.
VIII. ஆனாலும் வருமுன் காப்பதே மிகச்சிறந்த முறை அதற்கான சகல வழிகளையும் பின்பற்றுங்கள் , அம்முறைகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
Post a Comment