Top News

கபீரை ஓரம் கட்டுகிறதா ஐ.தே.க?

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகித்து வரும் அமைச்சர் கபீர் ஹாசிமை அப் பதவியிலிருந்து அகற்றி கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசத்துக்கு செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 கபீர் ஹாசிமுக்கு பிரதித் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது. எதிர்வரும் 5 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே இந்தப் பதவி மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்போது சரத் பொன்சேகாவுக்கும் பிரதித் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post