பௌத்தர்கள் வாழாத இறக்காமத்தில் புத்தர் சிலையை வைத்த தயா கமகே மற்றும் அதற்கு துணை போன ஐக்கிய தேசிய கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரசைக் கண்டிக்குமுகமாக முஸ்லிம்கள் ஐ தே கவின் மேதின கூட்டத்துக்கு செல்வதை பகிஷ்கரிக்க வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதாவது
கிழக்கு மாகாண முஸ்லிம்களின் விகிதாசாரத்தை குறைப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சி 1960 களிலிருந்தே முயற்சி எடுக்கிறது. இதன் காரணமாக முஸ்லிம்களை மிகப்பெரும்பான்மையான மாவட்டமாக கொண்டிருந்த அம்பாரை மாவட்டத்துடன் பல சிங்கள பிரதேசங்கள் இணைக்கப்பட்டன. அதே போல் அம்பாறையில் இருந்த முஸ்லிம்கள் ஐ தே கவால் விரட்டி அடிக்கப்பட்டு அவர்களின் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இன்று வரை அவை மு. காவால் பெற்றுத்தர முடியவில்லை.
இவற்றின் தொடராகவே மாணிக்கமடுவில் ஐ தே க மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் புத்தர் சிலை வைக்கப்பட்டு முஸ்லிம்களை விரட்டியடிப்பட்கற்கான முயற்சி நடக்கிறது. இதனை முஸ்லிம்கள் எதிர்த்த போது ஒரு வாரத்தில் சிலை அகற்றப்படும் என பிரதமர் ரணில் சொன்னதாக கூறி ஹக்கீம் வழமை போன்று முஸ்லிம்களை ஏமாற்றினார்.
எம்மை பொறுத்த வரை இந்த சிலைவைப்பின் பின்னணியில் ஐ தே க மற்றும் அதன் முஸ்லிம் ஏஜன்டான முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு கிழக்கை இணைக்கத்துடிக்கும் டயஸ்போரா என்பனவே இருக்கின்றன. அவற்றின் நிகழ்ச்சி நிரலே நடந்து கொண்டிருக்கிறது.
இந்த சிலை வைப்புக்கெதிராக அம்பாறை மாவட்ட முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம் செய்த போதும் அதில் மேலேயுள்ள சதிகாரர்களின் பெயர்கள் கூறப்பட்டு ஆர்ப்பாட்டம் நடக்காத்தால் அதன் கருத்தியல் பிசு பிசுத்து விட்டது.
ஆகவே இனியாவது இது விடயங்களில் உலமா கட்சியின் கருத்துக்களை செவியேற்று முஸ்லிம்கள் விழிக்க வேண்டும். அந்த வகையில் இத்தகைய சிலை வைப்பை கண்டிக்கிறோம் என்ற செய்தியை உலகுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஐ தே கவின் மே தினத்தை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதன் விளைவுக்கான பொறுப்பை முஸ்லிம்களே ஏற்க வேண்டும். முஸ்லிம்கள் ஐ தே கவின் மேதின கூட்டத்துக்கு செல்வதை புறக்கணிக்க வேண்டும்.