இறக்காமம்: உங்கள் அரசியலையும் கொள்கையையும் ஒருபுறம் தள்ளிவையுங்கள்

NEWS
0
இறக்காமம், வாங்காகமம் பள்ளிவாசலில் வழங்கப்பட்ட நார்சா உணவு நஞ்சானதில் 600க்கும் மேற்பட்டோர் ஒவ்வாமைக்கு ஆளாகியிருப்பதுடன் 4 பேர் உயிரிழந்துமுள்ளனர். இந்த திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல வைத்தியசாலைகளும்  தீவிரமாக இயங்கி வருகின்றன.

இந்த அனர்ததத்தில் பாதிக்கப்பட்டுள்ள சகல மக்களும் உடனடியாக குணமடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம். இது ஒருபுறமிருக்க, இந்த சம்பவத்தை பயன்படுத்தி சிலர் தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்கவும இன்னும் சிலர் மார்க்க கொள்கை முரண்பாடுகள் காரணமாக தமது சந்தோசத்தை வெளிக்காட்டியும் நடந்து கொள்கின்றனர்.

இவை வன்மையாக கண்டிக்கத்தக்கவையாகும். உங்கள் அரசியலையும் மார்க்க கொள்கை முரண்பாடுகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வாருங்கள். அம்பாறை மாவட்டத்திலேயே சுகாதார பிரதியமைச்சரும் மாகாண சுகாதார அமைச்சரும் உள்ளனர். அவர்கள் துரிதமாக செயற்பட்டு தேவையான வளங்களை இறக்காம ம் உட்பட அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top