டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி ஒன்றுக்கு முதல் முறையாக உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. “டெங்கு வெக்சியா” என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, இருபது வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவும் தென்கிழக்கு ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தடுப்பூசி 70 வீதம் வெற்றியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெக்சிக்கோ, பிறேசில், எல்சல்வடோர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்பது வயதைக்கடந்த ஒருவருக்கு வருடத்திற்கு மூன்று தடவைகள் இந்த தடுப்பூசியை ஏற்றமுடியும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
120 நாடுகளில் வருடாந்தம் 390 மில்லியன் மக்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படுகின்றனர். உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ள தடுப்பூசியை இலங்கையில் பயன்டுத்துவதற்குள்ள இயலுமை தொடர்பில் ஆராய்ந்து வருவமாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் இலங்கையில் டெங்கு காய்ச்சலால் 53 பேர் உயிரிழந்துள்ளடன், 29,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment