மு.கா, அ.இ.ம.கா. பிரமுகர்கள் இறக்காமத்துக்கு படையெடுப்பு

NEWS
0
இறக்காமத்தில் உணவு நஞ்சான விவகாரத்தில் உயிரிழந்தவரகளின் வீடுகளுக்கு இன்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் நேரில் விஜயம் செய்து ஆறுதல் கூறினர். அத்துடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவோரையும் பார்வையிட்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியூத்தீன் வைத்தியசாலைகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதுடன்  உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கும் சென்று ஆறுதல் கூறினார். அதேபோன்று, மு.கா. சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர், உறுப்பினர் மாஹிர் உட்பட பலர் விஜயம் செய்தனர். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top