பஸ்ஹான் நவாஸ்
தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான மீதொட்டமுல்ல பிரதேசத்தில் காணப்படும் குப்பை மேடு சரிந்ததில் இது வரை 28 பேர் உயிரிழந்துள்ளதோடு முப்பது பேர் காயமடைந்துள்ளார்கள். ஜேவிபி ராஜபக்ஷ உட்பட எதிர்கட்சிகள் இந்த சம்பவத்தின் மூலம் அரசியல் இலாபம் தேட முனைவதை அவதானிக்கலாம்.
ஏழு வருடங்களுக்கு முன்னர் இலங்கை ஊடகவியல் கல்லூரியில் இறுதிப் பயிற்சிக்காக சுவர்ணவாஹினி தொலைக்காட்சிக்கு என்னை அனுப்பினார்கள். அங்கு பயிற்சி பெறும் நாளில் புலனாய்வு அறிக்கையிடலுக்காக கொழும்பு ப்ளூமென்டல் குப்பைமேட்டுக்கு எமது குழுவினர் சென்றார்கள். வாழ்வைில் முதல்தடவையாக அந்த இடத்தை பார்வையிட கிடைத்தது.
குப்பை மேட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கும் நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. நாம் மோசமான நாற்றத்திற்கு மத்தியில் குப்பை மேட்டின் உச்சிக்கு வாகனத்தில் சென்றோம். அங்கு பலகையால் நிர்மாணிக்கப்பட்ட மூன்று வீடுகள் இருந்தன. சிலர் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள்.
சில கேள்விகளை குப்பை அகற்றுவோரிடம் கேட்டோம். போதிய தகவல்கள் கிடைத்தன. மிக உயரமான குப்பை மலை என்று சொலல்லாம். காரணம் கண்டிவீதியில் இருந்து பேலியகொட புதிய பாலத்தின் ஊடாக கொழும்பு நுழையும் போது வலது பக்கமாக ப்ளுமென்டல் குப்பை மேடு நன்றாகத் தெரியும். பின்னர் அங்கு வசிக்கும் மக்கள் பிரச்சினைகளை கூறினார்கள்.
எமது குழுவில் இருந்த சிலரின் கண்கள் கலங்கியிருந்தததை அவதானித்தேன்.
துற்நாற்றத்தினால் மாத்திரம் பலர் மனநோய்களுக்கு உட்பட்டிருந்தார்கள் என்று அவர்கள் கூறியதும் ஞாபகம். மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கு அருகில் வாசித்தவர்களை Illegal settlements என்று கூறமுடியாது. நீண்ட காலமாக காணி உறுதி பத்திரங்களுடன் மக்கள் வசித்த பகுதியில் கடந்த அரசாங்கம் குப்பை கொட்ட ஆரம்பித்தது. ஆனால் சட்டவிரோதமாக இந்த பகுதியில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
சட்டரீதியாக வாழும் மக்கள் மக்களுக்கு மாற்று ஒழுங்குகளை மேற்கொள்ள அரசாங்கம் தவறிவிட்டது. இந்தக் குப்பை மேட்டில் வெடிப்புக்கள் ஏற்படுவது சகஜம். வாயுக்களின் வெளியேற்றத்தினால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. கடந்த மாதம் லங்காதீப என்ற சிங்களப் பத்திரிகைக்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுருத்த கருணாரட்ன அவர்கள் இன்னும் சில நாட்களில் குப்பை மேடு சரிவடைந்து பாரிய மனித உயிரிழப்புக்கள் ஏற்டலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்ததை இன்று நினைவுபடுத்திக்கொள்கிறேன்.
கடந்த டிசம்பர் மாத இறுதிக்குள் குப்பைகள் அகற்றப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தது.ஆனால் தமக்கு வாக்களித்த மக்களின் பணத்தில் இருந்து car permitஐ வாங்கிக்கொள்வதில் இருந்த சிரத்தை தமக்கு வாக்களித்தவர்களின் குப்பை பிரச்சினையை நீக்குவதில் அவர்களுக்கு இருக்கவில்லை. இலவசமாக குப்பைகளை அகற்ற முன்ன வந்த ஒரு பொறியியலாளரிடம் சில அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள்.
இந்த அனர்த்திற்கு அரசாங்கம் முழுமையான பொறுப்பு என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் கூறியிருந்தார். எனினும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபா என்ற செற்பத்தொகையை இழப்பிடாக அறிவித்திருக்கிறது. இதுவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் பெரும் அநீதியாகும்.
ஆனால் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள Night clubல் ஆட்டம் போட்டு கால் முறிந்தமைக்காக கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு அரசாங்கம் 200இலட்சம் ரூபா வழங்கியமை உங்களுக்கு நினைவிலிருக்கலாம். ஒரு வாரம் நீங்கள் அவர்களை திட்டுவீர்கள். பின்னர் உங்களை நீங்களே மறந்துவிடுவீர்கள். உங்கள் வாக்கு மீண்டும் ஹிருனிக்காவிற்கும், மரிக்காருக்குமே......