முஸ்லிம் இளைஞர்களின் அறிவீனத்தால் வந்த வினை

NEWS
0


கண்டி நகரை அண்­மித்­துள்ள கெட்­டம்பே மஹா விஹாரை வளவில்      வைக்­கப்­பட்­டி­ருந்த புத்தர் சிலையின் ஒரு பகு­தியை கொண்டு சென்று அதனை இரண்­டாக உடைத்து வாக­னத்தின் சில்லை மாற்ற தாங்­கி­யாகப் பயன்­ப­டுத்­திய இரண்டு முஸ்லிம் இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர்.

இந்த இரு இளை­ஞர்கள் உட்­பட பன்­னி­ரண்டு இளை­ஞர்கள் சிங்­கள புத்­தாண்டு தினத்­தன்று புத்­த­ளத்தில் இருந்து சுற்­றுலா வந்­துள்­ளார்கள். இவர்கள்       கெட்­டம்பே விஹா­ரைக்கு அருகில் வரும்­போது வந்த வாக­னத்தின் ஒரு சில்லில் காற்றுப் போயி­ருக்­கி­றது. சில்லை மாற்ற வாக­னத்தை நிறுத்திக் கொள்ள தாங்­கி­யாக ஒரு கல் தேவைப்­பட்­டி­ருக்­கி­றது. அருகில் இருந்த கெட்­டம்பே விஹாரை வளவில் இருந்த ஒரு சிலையை கல்­லெனக் கருதி எடுத்துச் சென்று அது பெரி­தாக இருந்­ததால் இரண்­டாக உடைத்து தாங்­கி­யாக வைத்து சில்லை மாற்ற முயன்­றி­ருக்­கின்­றனர்.

இந்த சம்­ப­வத்தைக் கண்டு கோப­முற்ற கூடி­யி­ருந்த பௌத்­தர்­களும்           பிக்­கு­களும் ஒன்று சேர்ந்து அந்த இடத்­துக்குச் சென்று எதிர்ப்பைத் தெரி­வித்­துள்­ளனர். பொலி­ஸா­ருக்கும் அறி­வித்­துள்­ளனர். இது ஒரு பெரிய பிரச்­சி­னை­யாக இனக் கல­வ­ர­மாக உரு­வாகும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இது பற்றி கேள்­விப்­பட்ட மத்­திய மாகாண சபை உறுப்­பினர் லாபிர் ஹாஜியர் பொலிஸ் அதி­கா­ரி­களை தொடர்பு கொண்டு மிகவும் சிர­மப்­பட்டு             நிலை­மையை சீராக்­கி­யுள்ளார். சிலையைக் கொண்டு வந்து உடைந்த இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top