உலகின் வயதான பெண்மணியாக கருதப்பட்ட இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மொரனோ 117 ஆவது வயதில் காலமானார்.
1899 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி பிறந்த எம்மா, 19 ஆம் நூற்றாண்டில் பிறந்து, உயிர் வாழ்ந்த கடைசி நபராக இருந்து வந்தார்.
மொரனோ மரணத்தை தொடர்ந்து 1900 ஆம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த யாரும் உயிருடன் இல்லை என்பது கிட்டத் தட்ட உறுதியாகி உள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்துள்ள குறித்த பெண் தன் வாழ்நாளில் இரண்டு உலக யுத்தங்களை பார்த்துள்ளதோடு ,இத்தாலியில் இதுவரை 90 அரசாங்கங்கள் மாறியுள்ளதாக தனது 117 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.