அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு பிரதமரின் அனுமதி தேவை

NEWS
0
அமைச்சர்கள் வெளிநாடு செல்வதாயின் பிரதமரின் அனுமதியை பெறவேண்டும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அமைச்சர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் வரையறை விதிக்கப்பட்டுள்ளதோடு, வருடத்திற்கு இரண்டு தடவைகள் மாத்திரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு  கூட்டம், இன்று பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் தலையில், கட்சியின் காரியாலயத்தில்  இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top