கடும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு நிவாரணமாக பாகிஸ்தான் அரசாங்கத்தினால் பத்தாயிரம் மெற்றிக்தொன் அரிசியை வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது.
அரிசி வழங்குவதை அடையாளப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செயித் ஷகீல் ஹுசேன் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதிடம் அரிசியை கையளித்தார்.
பத்தாயிரம் மெற்றிக்தொன் அரிசி வழங்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக தற்போது ஏழாயிரத்து எண்ணூறு (7800) மெற்றிக்தொன் அரிசி இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகரும் இந் நிகழ்வில் பங்கு பற்றினார்.
Post a Comment