Top News

நிகழ்வொன்றில் கண்ணீர் சிந்தினார் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
இறைவன் எங்களுக்கு தந்துள்ள பதவிகள் அனைத்தும் அமாணிதமாகும். அவைகளை பற்றி நாங்கள் எல்லோரும் கேள்விக்கு உட்படுத்தப்படுவோம் என்பதில் நாங்கள் மிக தெளிவாக நடந்துகொள்ள வேண்டும். எங்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் மரணத்தின் பின்னர் நானும் நிச்சயமாக கேள்விக்கு உட்படுத்தப்படுவேன்.

எனவே நான் மிகவும் சாதாரனமான வறிய குடும்பத்தில் பிறந்தவன். நாங்கள் ஒரு நாளைக்கு ஒரு தடைவை சாப்பிடுவதற்கு கூட கஸ்ட்டமான சூழ் நிலையிலேயே வாழ்ந்து வந்தோம்.

1989ம் ஆண்டு நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற பொழுது தன்னிடம் இருந்த சொத்தாக கருதப்பட்டது ஒரு துவிச்சக்கர வண்டி மாத்திரமே. அதன் பெறுமதி அன்றைய நிலையில் 650ரூபாய்கள் மாத்திரமே. அதனோடு சேர்த்து இரண்டு காற் சட்டைகளும், இரண்டு சேட்களும் மாத்திரமே இருந்தது.

நான் முதன் முதலாக பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு செல்கின்ற வேலையில் என்னிடம் புதிய சேட் வாங்குவதற்கு கூட வசதி இருக்கவில்லை.

ஆகவே அவ்வாறு இருந்த என்னை அல்லாஹ் பாராளுமன்றத்திற்கு அனுப்பி பதவிகளையும், அதிகாரங்களையும் தந்து சோதிக்கின்றான். ஆகவே எங்கள் மீது வழங்கபடுகின்ற பதவிகளை இறைவனின் கட்டுப்பாடுகளுக்கு பயந்து செயற்படுத்துபவர்களாக எங்களை மாற்றியமைத்துகொள்ள வேண்டும்.
அந்த வகையிலே ஜனாதிபதி தொடக்கம் கடையில் இருக்கின்ற சிப்பந்தி வரையில் நாங்கள் எலோரும் இறைவனுடைய கேள்விக்கு உட்படுத்தபடுபவர்களாகவே காணப்படுவோம்.

அதனை நினைத்து அல்லாவிற்கு பயந்தவனாக என்னுடைய வாழ்க்கையில் நான் எப்பொழுதும் கடைப்பிடித்து வருகின்ற விடயமாக எனக்கு இறைவன் தந்துள்ல அமாணிதங்களை பாதுகாத்து வருகின்றேன் என கிழக்கு வாசல் எனும் (Gateway To East) இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ்வின் கிழக்கின் அரசியல் பின்னணியும், ஹிஸ்புழ்ழாஹ்வின் 25 வருட அரசியல் பதிவுகளும் எனும் தலைப்பில் காத்தான்குடியில் இன்று (10.04.2017) இடம் பெற்ற நிகழ்வில் கண்ணீர் மழ்க உரையாற்றினார் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் சரித்தம் அல்-ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ்.

காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற குறித்த கிழக்கு வாசல் நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தற்போதைய பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதீயாக கலந்து சிறப்பித்ததுடன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் இஸ்ஹாஜ், முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், பல்கலைகழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், கல்விமான்கள் உலமாக்கள், என மாவட்டத்தில் மட்டுமல்லாது தேசியத்திலே தாக்கம் செலுத்துகின்ற பலர் சமூகமளித்திருந்தமை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் ஓர் அரசியல் சரித்திரம் என்பதனை உலகிற்கு எடுத்துக்காட்டும் விடயமாக இன்று காத்தான்குடி மண் பறைசாற்றியது.

அது மட்டுமல்லாமல் கிழக்கு வாசல் எனும் குறித்த நிகழ்வில் எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ்வின் கிழக்கின் அரசியல் பின்னணியும் ஹிஸ்புழ்ழாஹ்வின் 25 வருட அரசியல் பதிவுகளும் என்ற ஆவணபடுத்தலுடனான நூலும் வெளியிடப்பட்டமை முக்கிய விடயமாக பார்க்கப்பட்டது. குறித்த வரலாறு நிகழ்வின் விரிவான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post