Top News

நல்லாட்சி அரசின் பிரதிபளிப்புகளில் ஒன்றே சஜித் பிரமேதாசவின் வீட்டுத்திட்டங்கள்

நல்லாட்சி அரசின் பிரதிபளிப்புகளில் ஒன்றே சஜித் பிரமேதாசவின் வீட்டுத்திட்டங்கள் என திருகோணமலை மாவட்ட ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். அண்மையில் திருகோணமலை கப்பல்துறைப் பகுதியில் இடம்பெற்ற வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் முன்னால் ஜனாதிபதியும் கௌரவ அமைச்சரின் தந்தையுமான ரணசிங்க பிரமேதாச ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில் எனது தந்தை  கப்பல்துறை ராஜாங்க அமைச்சராக இருந்தார் அவர்களின் காலத்தில் இங்கு அடிப்படைவசதியற்ற நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு வீடுகள் அமைத்துகொடுக்கப்பட்டன. இன்று முன்னால்  ஜனாதிபதியின் மகன் சஜித் பிரேமதாச தனது தந்தையின் பணிகளைப் பொறுப்பேற்று நாடுமுழுவதும் பல வீட்டுத்திட்டங்களை அமைக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இங்கு நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து எமது தந்தையினால் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன். ஜமாலியா பகுதியில் வாழும் மக்கள் சுமார் நூறு வருடமாக  காணி உறுதிப்பத்திரம் இல்லாமல் வாழ்கின்றனர். அக்குறையினை இன்று நிவர்த்தி செய்த்திருக்கின்றோம்.

இவ்வாறான மக்களுக்கு பயன்தரும் நலன் திட்டங்களை முன்னெடுத்துவரும் நல்லாட்சியை ஊர்வலங்கள் செல்வதாலோ உண்ணாவிரத்தில் ஈடுபடுவதாலோ அழித்துவிடமுடியாது. எமது ஆட்சியை அசைத்து பார்க்கும் அளவுக்கு கூட்டு எதிர்கட்சியில் தலைவர்கள் யாரும் இன்னும் உருவாகவில்லை அங்குள்ள அனைவரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு அரச பணத்தை கொல்லையடித்தவர்களே எனத்தெரிவித்தார்
ஊடகப்பிரிவு                                                                         

Post a Comment

Previous Post Next Post