Top News

இஸ்லாம் குறித்து தவறாக எழுதிய இந்தியருக்கு டுபாயில் நேர்ந்த கதி!

சமூக வலைதளங்களில் இஸ்லாம் குறித்து தவறாக எழுதியும், பிரபல எழுத்தாளர் ரானா அய்யூப் குறித்து ஆபாசமாகவும் எழுதியவர் மீது டுபாயின் பிரபல நிறுவனம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த 31 வயது பி.பி என்பவர் துபையில் Alpha Paint நிறுவனத்தின் துணை நிறுவனமான National Paints நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் இந்தியாவின் பிரபல எழுத்தாளர் ரானா அய்யூபுக்கு ஃபேஸ்புக் மெசெஞ்சரில் ஆபாசமான முறையில் தகவல் அனுப்பியுள்ளார்.

அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த ரானா அய்யூப் அதனை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்து இது ஒரு சாம்பிள்தான் இதேபோல பல மெஸேஜ் எனக்கு அனுப்பியுள்ளார் என்று பி.பி குறித்து அம்பலப்படுத்தியிருந்தார்.

மேலும் பிபியின் ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாம் குறித்தும் தவறாக எழுதியிருந்ததாகவும் ஆதாரங்களுடன் National Paints நிறுவனத்திற்கு புகாராக தெரிவிக்கப் பட்டது. இதனை அடுத்து பி.பி யை National Paints நிர்வாகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டதோடு, அவர் குறித்தும். அவரது பதிவுகள் குறித்தும். ஆதாரங்களுடன் சைபர் க்ரைமிலும் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே எழுத்தாளர் ரானா அய்யூப் பி.பி குறித்து டெல்லி காவல்துறையில் புகாரளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் பி.பி மீது உடனடி நடவடிக்கை எடுத்த National Paints நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தெஹல்கா ஏட்டின் ஆசிரியராக இருந்தவர் ரானா அயூப்,“குஜராத் கோப்புகள் : மறைக்கப் பட்ட விவரங்கள்’’ என்று குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் முஸ்லிம் களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகளின்போது நடைபெற்ற சம்பவங்களை தன்னுடைய எழுத்தின் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post