Top News

புதிய அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது

இலங்கையில் இனங்களுக்கு இடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனை இலக்காக கொண்டு தயாரிக்கப்படும் புதிய அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜப்பான் முழுமையான ஆதரவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜப்பர்னிய பிரதமர் சின்சோ அபோ இதனைத் தெரிவித்துள்ளார்.  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற இருதரப்பு உறவுகள் குறித்த கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். டோக்கியோ நகரில் அமைந்துள்ள ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, இலங்கையின் துறைமுகம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேறு தேசிய மட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு விசேட ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் ஜப்பான் பிரதமர் சின்சோ அபோ குறிப்பிட்டுள்ளார். இலங்கையும் ஜப்பானுக்கு இடையே மிக நெருக்கமான உறவு காணப்படுவதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். அந்த நெருக்கத்தை தற்போதைய விஜயம் உறுதி செய்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இரண்டு நாடுகளும் தீவாக காணப்படுகின்றது. தீவாக இருந்தாலும் ஏனைய நாடுகளுடன் பொருளாதார தொடர்பை கொண்டிருக்க வேண்டியது முக்கியம். வலயத்தின் ஸ்திரத்தன்மை பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post