Top News

துருக்கி சர்வஜன வாக்கெடுப்பில் தையிப் அர்துகானுக்கு வெற்றி


துருக்கியில் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் ரரெஸீப் தையிப் அர்துகானின் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. உத்தியோகப்பற்றற்ற, இருப்பினும் நம்பத் தகுந்த வட்டாரங்களை அடிப்படையாக வைத்து இந்த செய்தியை சி.என்.என். நிறுவனம் வெளியிட்டுள்ளது.
துருக்கி தேர்தல் ஆணைக்குழு இதுவரையில் இந்த முடிவுகளை உத்தியோகபுர்வமாக வெளியிடவில்லை.  குறைந்தது மூன்று முறை வாக்கெடுப்புக்கள் எண்ணப்பட்டு பரிசிலிக்கப்பட்ட பின்னரே உத்தியோகபுர்வ முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்க் கட்சிக்கு ஆணைக்குழு  உறுதியளித்துள்ளது.
இதன்படி, இந்த சர்வஜன வாக்கெடுப்பு முடிவுகள் இன்னும் 10 நாட்களின் பின்னரே உத்தியோகபுர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இருப்பினும், 99.8 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், தையிப் அர்துகானுக்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ள வாக்குகள் 51.4 வீதமாகவுள்ளதாக, துருக்கியின் உள்நாட்டு உத்தியோகபுர்வ செய்தி முகவர் நிறுவனம் ஒன்றை மேற்கோள் காட்டி சி.என்.என். குறிப்பிட்டுள்ளது.
துருக்கி ஜனாதிபதி ரரெஸீப் தையிப் அர்துகானின் அதிகாரங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு மாற்றத்திற்கு அனுமதி கோரும் சர்வஜன வாக்கெடுப்பு கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமாகியது.
குறித்த வாக்கெடுப்பில் ஆர்வம் காட்டியுள்ள ஏராளமான மக்கள், வாக்கு சாவடிகளில் மிகவும் பொறுமையாக வாக்களித்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்த வாக்கெடுப்பு அந்நாடு முழுவதுமுள்ள சுமார் 1 இலட்சத்து 67 ஆயிரம் வாக்கு மையங்களில் நடைபெற்றன. அத்துடன் இந்த வாக்கெடுப்பில் சுமார் 55 மில்லியன் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
துருக்கி இராணுவ புரட்சியை தொடர்ந்து துருக்கி அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்கு கூடிய அதிகாரம் வழங்கும் வகையில் திருத்தம் செய்ய ரரெஸீப் தையிப் அர்துகான் தீர்மானத்தை மேற்கொண்டார். இதை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பொது மக்களிடம் கருத்து கேட்க கடந்த 16 ஆம் திகதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த கருத்துக் கணிப்பில் ரரெஸீப் தையிப் அர்துகானின் கட்சி தோல்வியடைந்திருந்தால் சிலபோது பாராளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டி ஏற்படும் எனவும், இல்லாத போது அந்நாட்டில் அரசியல் மந்த நிலைமையை அடையும் எனவும் அரசியல் விமர்ஷகர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post