Top News

நஷ்டத்தில் இயங்கி வந்த சதோச இலாபம் ஈட்டுகின்ற நிறுவனமாக மாறியுள்ளது.

(எம்..றமீஸ்)

கடந்த காலத்தில் நஷ்டத்தில் இயங்கி வந்த சதோச விற்பனைநிலையங்களை நான் இதற்குப் பொறுப்பான அமைச்சினைப்பொறுப்பேற்றதிலிருந்து தற்போது இலாபம் ஈட்டுகின்ற நிறுவனமாகஅதனை மாற்றியமைத்திருக்கின்றோம் என அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று நகரில் நிறுவப்பட்டுள்ள லங்கா சதோச விற்பனைநிலையத் திறப்பு விழா இன்று(09) இடம்பெற்றதுஇந்நிகழ்வில் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்கடந்தகாலத்தில் சதேச நிறுவனம் மிகுந்த நஷ்டத்தில் இருந்து வந்ததுஇந்நடைமுறையினை நிவர்த்தி செய்து இந்நிறுவனத்தினைஇலாபமீட்டும் வகையில் மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டோம்அதற்கமைவாக துறைசார் நிறுவனங்கள் மற்றும் துறைசார்நிபுணர்களின் ஆலோசனைகளுக்கமைவாக பல்வேறான மாற்றங்களைமேற்கொண்டோம்அதன் விளைவாக தற்போது இந்நிறுவனம் பாரியஇலாபமீட்டும் நிறுவனமாக மாறியிருக்கின்றது.

கடந்த காலங்களில் இயங்கிய வந்த சதோச நிறுவனத்தின் விற்பனைநிலையங்களை நாம் தற்போது அதிக எண்ணிக்கை கொண்டதாகவிஸ்தரித்திருக்கின்றோம்அதுமட்டுமல்லாமல் நாட்டிலுள்ள அனைத்துசதோச விற்பனை நிலையங்களை ஒரே நேரத்தில் கண்காணிக்கக் கூடியவகையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கணணிமயப்படுத்தியிருக்கின்றோம்இதன் விளைவாக நாடு தழுவிய ரீதியில்உள்ள கிளைகளின் பிரச்சினைகளை குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள்நிவர்த்தி செய்யக்கூடிய வழி வகைகள் ஏற்பட்டுள்ளன.

சதோச விற்பனை நிலையங்கள் மூலம் பல்வேறான நன்மைகளைப்பெற்றுக் கொள்ள முடிவதனையிட்டு நாம் மிகுந்தமகிழ்ச்சியடைகின்றோம்மக்கள் கஷ்டப்பட்டு உழைக்கின்றபணத்தினைக் கொண்டு பொருட்களை கொள்வனவு செய்கின்றபோதுஅதன்பால் பூரண திருப்த்தியடைய வேண்டும்அதற்கேற்றால்போல்குறைந்த விலையில் மக்கள் திருப்த்திப் படக்கூடிய ஏராழமானபொருட்களை இச்சத்தோச விற்பனை நிலையங்கள் மூலம் வழங்கிவருகின்றோம்.

தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி சதோச நிறுவனத்தினால் சலுகைஅடிப்படையில் பொருட்பொதிகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டுவருகின்றனஇதனை மக்கள் கொள்வனவு செய்து நன்மையடையவேண்டும் என்னும் குறிக்கோளின்  அடிப்படையிலேயே இவ்வாறானவிடயங்களை நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

நாடளாவிய ரீதியில் உள்ள மக்கள் நலன் பெறும் வகையில் பல்வேறானஅபிவிருத்திகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் பல்துறை அபிவிருத்திகள்இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் இம்மாவட்டத்திலுள்ளகரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினைநுரைச்சோலைவீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறானபிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து அண்மையில் இறக்காமம் வாங்காமம்பிரதேசத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையினால் அக்கரைப்பற்றுஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களைஅமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன்அவர்களுக்கான தேவைகளை நிவர்த்திக்கும் வகையில் ஒரு தொகைப்பணமும் வைத்தியசாலையின் அத்திட்சகர் டாக்டர் .எம்.ஜவாஹிரிடம்வழங்கி வைத்தார்.

இது தவிர இவ்வைத்தியசாலையின் சமையலறை மற்றும் இதரகுறைபாடுகள் போன்றவற்றை நேரில் பார்வையிட்ட அமைச்சர்இவ்விடயம் தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் ஜனாதிபதிமற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி விரைவில்குறைபாடுகளை நிவர்த்தி செய்து அபிவிருத்தி செய்வதற்கானநடவடிக்கைகளை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்தார்.

Post a Comment

Previous Post Next Post