Top News

தெல்தோட்டை வனஹப்புவ கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் பொது நூலகத் திறப்பு



பிரதமர் ரணில் விக்கிரசிங்கவின் ஜப்பான் நாட்டு விஜயம் இலங்கை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. எமது நாட்டின் பொருளாதார வளத்தையும் அபிவிருத்தியையும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஜப்பான் நாட்டின் நிதி உதவி பெரும் உந்து சக்தியாக அமையவுள்ளது. அதிலும் விசேடமாக இந்த நிதி கண்டி மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு கூடுதலாகப் பயன்படுத்தப்படவுள்ளது.

 அதேவேளை மத்திய மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்காக 430 ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்காக நேர்முகப் பரீட்சை தற்போது நடந்து முடிவடைந்துள்ளது. அவ்வசிரியர்களை நியமனம் செய்வதற்காக முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக முஸ்லிம் கல்விப் பிரிவுக்கு புதிதாக ஒரு அதிகாரியும் நியமனம் செய்து பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஒழுங்குகளையும்  ஏற்படுத்தித் தந்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயவுக்கு நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். எனவே அந்தவகையில் நல்லாட்சியில் எமது சமூகத்தின் தேவைகளையும் சலுகைகளையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பை நாங்கள் பெற்றிருக்கின்றோம் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் எம் டி. எம் முத்தலிப் தெரிவித்தார்.

தெல்தோட்டை  வனஹப்புவ  கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில்  பொது நூலகத் திறப்பு விழாவும் வாசிப்பின் பெறுமதியை வலியுறுத்தி இந்தப் பிராந்தியத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் ஒன்றிணைந்து உள்ளுர் வீதியெங்கும் பாதை யாத்திரை ஊர்வலமும் சங்கத்தின் தலைவி ஹாஜியானி நாகூர் உம்மா காதர் தலைமையில் (15) இடம்பெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலை வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் மூலம் அழைக்கப்படமால் உள்;ள விண்ணப்பதாரிகள் இருந்தால் எம்மோடு தொடர்பு கொண்டால் அவர்களையும் அந்த நேர்கமுகப் பரீட்சைக்குத் தோற்ற வழிவகை செய்ய முடியும். எனவே பதிவுத் தபால் மூலம் விண்ணப்பம் செய்து நேர்மகப் பரீட்சைக்காக அழைக்கப்படாமல் விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பார்களாயின் உடன் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் நாம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்.

நாம் ஊடகத்தைப் பார்த்தால் பொதுவாக நாள்தோறும்  அவரவர் சுயநலம் நோக்கம் கருதியே பாதை யாத்திரைகள் மேற்கொள்வதை நாங்கள் பார்க்கின்றோம். ஆனால் தெல்தோட்டை வனஹப்புவ  மாணவர்கள் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பொது நோக்குடன் தம் கிராமத்தின் உள்ளுர் வீதி எங்கும் வீதி உலா சென்றதைப் பார்க்கும் போது  எமது சமூகம்  புதிய மாற்றத்தை  நோக்கிப் பயணிப்பதைப வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடியதாக அமைந்துள்ளது.

கையடக்கத் தொலைபேசி பிள்ளைகளின் பாவனைக்காக பெற்றுக் கொடுக்காதீhகள். தொலைபேசியை ஆத்திர அவசரத்திற்காக ஹாலோ எங்கு இருக்கிறாய் என அறிந்து கொள்வதற்காக மட்டும் வாங்கிக் கொடுங்கள். ஆனால் ஸ்மார்ட் தொலைபேசிகளை வாங்கிக் கொடுக்க வேண்டாம். தொலைபேசிப் பாவனையால் மாணவர் சுமூகம் சிதைந்து போயுள்ளது. சிறுவர் மட்டும் இல்லை எல்லாத் தர வயதையுடையவர்களும் இதுவேதான் நிலைமை. வாசிப்பின் மகிமை வாழ்க்கை வட்டத்திலிருருந்த மதிப்பும் மரியாதையும் தேய்ந்து கொண்டே செல்கின்றன. காலத்தின் தேவை அறிந்து வனஹப்புவ கல்வி அபிவிருத்திச் சங்கம் முன்னெடுத்துள்ள பணி பாராட்டத்தக்கதாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதில் தலைமையுரை நிகழ்த்திய  முன்னாள் ஓய்வு பெற்ற அதிபரும்  வனஹப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தின தலைவியுமான நாகூர் உம்மா உரையாற்றுகையில்  கல்வி இலகுவில் பெற்றும் கொள்ளும் விடயமல்ல. அது மிகவும் கஷ்டப்பட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். நல்லா வாசிக்க வேண்டும். வாசித்தால் நல்லதை யோசிக்கலாம். நல்ல மனிதனாக வாழ முடியும். நன்றாகச் சிந்திக்கலாம். கல்வி இல்லாதவனை சமூகம மதிக்காது.. சமூகத்திலே அவர்களுக்கு எந்த அந்தஸ்தும் கிடைக்காது.

உங்களுடைய அழகான ஊர்வலத்தில் ஆர்த்தம் நிறைந்த வாசகங்கள் பொதிந்த பாதைகளுடன் கருத்துச் செறிவான கோசத்துடன் குரல் எழுப்பி ஊhவலம் சென்றீர்கள். அவைகள் அத்தனையும் மனதைக் கவரக் கூடியதாக அமைந்தன என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் தொழிலதிபர் பாரூக் ஹாஜியார், எனசகொல்ல அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி

Post a Comment

Previous Post Next Post