ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

NEWS
0
ஈரானில் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியது.

இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ஈரானில் இன்று (புதன்கிழமை) வடகிழக்கே உள்ள மஸ்கட் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார். இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 4 கிராமங்கள் பாதிப்படைந்துள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களுக்கு உதவ மீட்புப் படையினர் ஹெலிகாப்டரில் விரைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை பற்றி உறுதியான தகவல் இல்லை.
ஈரானில் 2003-ம் ஆண்டு ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 26,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top