இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜேர்மன் சர்வாதிகாரியான அடாஃப் ஹிட்லர்
மற்றும் அவருடைய மனைவியான ஈவா பிரவுன் ஆகிய இருவரும் இன்றைய
நாளில்(ஏப்ரல்-30) தான் தற்கொலை செய்துக்கொண்டனர்.
ஆஸ்திரியா நாட்டில் பிறந்து ஜேர்மனி நாட்டின் சர்வாதிகாரியான ஹிட்லரை உலக வரலாறு என்றும் மறக்காது.
முதலாம் உலகப்போரில் ஒரு சாதாரண போர் வீரனாக பங்கேற்ற ஹிட்லர் இரண்டாம் உலகப்போர் உருவாவதற்கு அவரே முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.
சிறு வயது முதல் பெண்கள் மீது நாட்டம் இல்லாத ஹிட்லர் ஜேர்மனியில் ஆட்சியை பிடித்ததற்கு பின்னர் ஈவா பிரவுன் என்ற ஒரு பெண்மணியிடம் மட்டும் அளவுக்கு அதிகமான அன்புக் கொண்டுருந்தார். ஈவா பிரவுனும் ஹிட்லர் மீது அளவில்லா காதல் கொண்டதாக வரலாறு கூறுகிறது.
இந்நிலையில், 1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது ஜேர்மனியின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுப்போனது. தனது ராணுவம் தோல்வியை சந்தித்துவிட்டது என்பதை முன்கூட்டியே அறிந்துக்கொண்ட ஹிட்லர் தனது முடிவை தேடிக்கொள்ள தயாரானார்.
ஏப்ரல் 30-ம் திகதி ஹிட்லரும் ஈவா பிரவுனும் ஒன்றாக சேர்ந்து மதிய உணவை சாப்பிட்டுள்ளனர். மதிய உணவின்போது ‘தயவு செய்து நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள்’ என ராணுவ அதிகாரிகள் கூறியதை ஹிட்லர் ஏற்கவில்லை.பின்னர், பிற்பகல் 3 மணியளவில் தனது நண்பர்களுக்கு இறுதி வணக்கத்தை செலுத்துவிட்டு இருவரும் அறைக்குள் நுழைந்துள்ளனர்.
சரியாக, 3.28 மணி நேரத்தில் ஈவா பிரவுன் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். பின்னர், 3.30 மணியளவில் ஹிட்லர் தன்னை தானே நெற்றியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஹிட்லரின் விருப்பப்படி இருவரின் உடலும் Reich Chancellery பூங்காவில் உருத்தெரியாமல் எரிக்கப்பட்டது.
இச்சம்பவத்திற்கு பிறகு அரண்மனைக்குள் நுழைந்த ரஷ்யப்படைகள் வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்யக்கொடியை ஊன்றி அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.