Top News

சிலாவத்துறை கடற்படை முகாமை விரைவில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது



மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறை கடற்படை முகாம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பான ஆவணங்கள் ஒன்றுதிரட்டப்பட்டு நேற்று முன்தினம் (27) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சிலாவத்துறை கடற்படை முகாமை இடமாற்றக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

புதுவருடத்தின் பின்னர் இதுகுறித்து தாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேசுவதாக பிரதமர் பதிலளித்தார். இதற்கமைய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக், கடற்படை முகாம் மூலம் காணிகளை இழந்த மக்களின் ஆவணங்களை ஆவணப்படுத்தி அவற்றை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கையளித்தார். இந்த ஆவணங்களை அமைச்சர் ஹக்கீம் பரதமரிடன் கைளிப்பார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றுவதற்கு மேற்கொள்கின்ற நடவடிக்கைக்கு பள்ளிவாசல் நிர்வாகிகள் அமைச்சர் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் ஆகியோருக்கு நன்றிகளையும் தெரிவித்தனர். 
Previous Post Next Post